கொசோவோவில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 12, 2010

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சேர்பியாவில் இருந்து பிரிந்து சென்ற கொசோவோ இன்று தனது முதலாவது நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தியது.


பிரதமர் ஹசீம் தாச்சி

கொசோவோவின் விடுதலை அறிவிப்பை சேர்பியா அங்கீகரிக்காத நிலையில் கொசோவோவில் வாழும் சிறும்பான்மையின சேர்பியர்கள் இத்தேர்தலைப் புறக்கணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கொசோவோவில் இடம்பெறும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


பிரதமர் ஹசீம் தாச்சி தலைமையிலான கொசோவோ மக்களாட்சிக் கட்சி இத்தேர்தல்களில் முன்னணியில் நிற்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


ஹசீம் தாச்சியின் கூட்டணியில் முன்னர் இருந்த கொசோவோ மக்களாட்சி முன்னணி ஆளும் கட்சிக்கு பலத்த சவாலாக விளங்குகிறது.


மூலம்[தொகு]