உள்ளடக்கத்துக்குச் செல்

கொம்புகளைக் கொண்ட இரண்டு புதிய இன டைனசோர்கள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 26, 2010


ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் இரண்டு புதிய இன தாவர-உண்ணி தொன்மாக்களை (டைனசோர்) தாம் கண்டுபிடித்திருப்பதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


15 கொம்புகளைக் கொண்ட கொஸ்மொசெராட்டொப் ரிச்சார்ட்சோனி என்ற தொன்மா
படிமம்:Paleogeography of North America during the late Campanian Stage of the Late Cretaceous.png
லரமீடியா, அப்பலாச்சியா என்ற இரு கண்டங்களாக வட அமெரிக்கா

இந்த மிருகங்கள் 68 முதல் 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் லரமீடியா என்ற “தொலைந்த கண்டத்தில்” வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய வட அமெரிக்காவின் ஆழமற்ற கடல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் லரமீடியா, அப்பலாச்சியா என்ற இரு கண்டங்களாகப் பிளவுற்றது.


புளொஸ் வன் (Plos One) என்ற அறிவியல் இதழில் இக்கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மாக்கள் வெப்பமண்டல சதுப்பு நிலப்பரப்பில் வாழ்ந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இவை செரட்டோப்சியான் என்ற தொன்மாக் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். செரட்டோப் என்றால் கிரேக்க மொழியில் கொம்புள்ள முகம் என்று பொருள்.


புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தொன்மாக்களும் தமது தலையில் பல கொம்புகளைக் கொண்டிருந்தாலும், இவற்றில் பெரியது தனது மூக்கில் மிகப் பெரும் கொம்பைக் கொண்டுள்ளது.


இரண்டாவது வகை தொன்மா கொஸ்மொசெராட்டொப் ரிச்சார்ட்சோனி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் 11 கொம்புகளுமாக மொத்தம் 15 கொம்புகள் காணப்படுகின்றன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மாக்களில் இதுவே மிகவும் அழகுபடுத்தப்பட்ட தலையைக் கொண்ட தொன்மா எனக் கூறப்படுகிறது.

மூலம்