கொலம்பியாவின் பெரிய கிளர்ச்ச்சியாளர் குழுவான பார்க் போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, மே 23, 2015

கொலம்பியாவின் பெரிய இடதுசாரி கிளர்ச்சியாளர் குழுவான கொலம்பியாவின் புரட்சி இராணுவ படை என்ற பெயர் கொண்ட பார்க் (FARC - Fuerzas Armadas Revolucionarias de Colombia) தன்னிச்சையாக அறிவித்திருந்திருந் போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டது.


2014, டிசம்பர் முதல் அரசு போர்நிறுத்தத்தை அறிவிக்காத போதிலும் பார்க் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது, வியாழன் அன்று வான் & தரைப்படை கூட்டு தாக்குதலில் அதன் உறுப்பினர்கள் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்தாக அறிவித்தது. போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்ட போதிலும் கூபா தலைநகர் அவானாவில் நடைபெறும் இறுதி கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் அவ்வியக்கம் கலந்து கொள்ளும் என அறிவித்தது.


கடந்த ஏப்பிரல் மாதம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து கொலம்பிய அதிபர் சாண்டோசு வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். பேச்சுவார்த்தையின் போது ்பார்க் வலது சாரி ஆயுத குழுக்கள் கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதை அரசு தடுக்க வேண்டும் என கேட்டிருந்தது.



மூலம்[தொகு]