உள்ளடக்கத்துக்குச் செல்

கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 200 க்கும் மேற்பட்டோர் பலி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 1, 2024

தென் மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 200 பேர் உயிரிழந்துள்ளர். அந் நாட்டின் அதிபர் யூவான் மானுவெல் சான்டோசு அப்பகுதிக்கு விரைந்துள்ளார்


மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புடுமயோ மாகாணத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சிக்கிய பல பேரைக் காணவில்லை. சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் மண்சரிவில் புதைந்திருப்பதாக அப்பகுதியின் ஆளுநர் சொரேல் ஆரோகா தெரிவித்திருக்கிறார்.


சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் பயணித்தால்தான் மண்சரிவு நடந்த இடத்தை அடைய முடியும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நகரம், மின்சாரம், தண்ணீர் வசதியின்றி முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதாக மொகோவா மேயர் யோசு அந்தோனியோ காசுட்ரோ தெரிவித்துள்ளார். தன் வீடும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் அந்தோனியா தெரிவித்தார்.


ஆற்றின் கரைகள் உடையும் அபாய நிலையை அறிந்ததும் மக்கள் எச்சரிக்கப்பட்டதால், பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என உள்ளூர் பத்திரிகை தெரிவிக்கிறது. மண்சரிவு ஏற்பட்ட பகுதி, ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.


கனமழைக்கு இந்த ஆண்டு மட்டும் 90 பேருக்கு மேல் பெருவில் பலியாகி உள்ளனர்.

மூலம்

[தொகு]