சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கியமைக்காக மூவருக்கு 2010 வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், அக்டோபர் 7, 2010


கரிம அணுக்களை இணைக்க புதிய வழிகளைக் கண்டுபிடித்தமைக்காக இவ்வாண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பேராசிரியர்கள் ரிச்சார்ட் ஹெக், ஐ-இச்சி நெகிசி, அக்கிரா சுசுக்கி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய வகை வேதியியல் முறை மூலம் மருந்துகள், இலத்திரனியல் போன்றவற்றில் புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கு அறிவியலாளர்களுக்கு வழி பிறந்துள்ளது. ”கரிமவேதியியல் தொகுதியில் பலேடியம்-வினையூக்கி குறுக்குப் பிணைப்பை” உருவாக்கியமைக்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுவதாக ரோயல் சுவீடிய அறிவியல் கழகம் நேற்று வெளியிட்ட தனது செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.


இவ்வாறான மூலக்கூறுகள் கடல் பாசியில் சிறிதளவு கடுபிடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க் கலங்களை அழிக்க இவற்றைப் பயன்படுத அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.


79 வயதாகும் ரிச்சர்ட் ஹெக் ஐக்கிய அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 75 வயதாகும் நெகிசி இந்தியானாவின் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 80 வயதாகும் சுசுக்கி சப்பானின் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு $1.5 மில்லியன் பெறுமதியானதாகும்.


மூலம்

Bookmark-new.svg