சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலமானார்
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 17 பெப்ரவரி 2025: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 17 பெப்ரவரி 2025: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
சனி, நவம்பர் 17, 2012
இந்தியாவின் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே மாரடைப்புக் காரணமாக மும்பையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தனது 86வது அகவையில் காலமானார்.

86 வயதுடைய பால் தாக்கரே வரைகலை நிபுணராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். வெளிமாநிலங்களில் இருந்து வந்து மகாராட்டிர மாநிலத்தில் குடியேறியவர்கள், மராட்டியர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறிய தாக்கரே, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி, 1966 ஆம் ஆண்டில் சிவசேனா கட்சியைத் துவக்கினார். குறிப்பாகத் தமிழர்கள் சிவசேனைக் கட்சியின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் மும்பையின் வல்லமை மிக்க அரசியல்வாதியாக விளங்கிய இவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
பால் தாக்கரேயின் மறைவுக்கு முக்கிய தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கிறது. இதனை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Shiv Sena supremo Bal Thackeray passes away, சீ நியூஸ், நவம்பர் 17, 2012
- Bal Thackeray passes away; funeral on Sunday, த இந்து, நவம்பர் 17, 2012