உள்ளடக்கத்துக்குச் செல்

சி நிரலாக்கல் மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 14, 2011

கணினி அறிவியலில் முன்னோடியும், சி நிரலாக்க மொழியை உருவாக்கியவரும், யுனிக்சு இயங்குதளத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான டெனிஸ் ரிட்ச்சி தனது 70வது அகவையில் காலமானார்.


படிமம்:Dennis MacAlistair Ritchie.jpg
டெனிஸ் ரிட்ச்சி

யுனிக்ஸ் இயங்கு தளம் 1960கள், 1970களில் அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் பெல் ஆய்வுக்கூடத்தில் கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது. அத்துடன், சி நிரலாக்க மொழியை உருவாக்கியவரும் இவரே. கணினித் தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களில் ரிட்ச்சி போன்றவர்களின் கண்டுபிடிப்புகளே தற்போதுள்ள பல நவீன தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படுகின்றன.


1941 ஆம் ஆண்டு பிறந்த டெனிஸ் ரிட்சி தன் 30 ஆவது வயதில் யூனிக்ஸ் இயங்குதளத்தினைத் தந்தவர். நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த இவர் கடந்த புதன்கிழமையன்று நியூஜெர்சியில் காலமானார். ரிட்ச்சி பெல் ஆய்வுகூடங்களில் லூசெண்ட் டெக்னலாஜீஸ் ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


அமெரிக்காவின் தொழில்நுட்பப் புதுமையாக்கப் பதக்கம் இவருக்கும் இவருடன் இணைந்து யுனிக்சை உருவாக்கிய கென் தாம்ப்சனுக்கும் 1998 ஆம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் வழங்கப்பட்டது.


இவர் தன் நண்பர்களுடன் இணைந்து எழுதிய சி நிரலாக்க மொழி நூல், இன்றும் கணினி மாணவர்களால் ஓர் அடிப்படை நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவர் உருவாக்கிய சி மொழி பின்னர் பல மொழிகளுக்கும், குறியீடுகளுக்கும், திறந்த மூலத் திட்டத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது. இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பாய யுனிக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது.


மூலம்

[தொகு]