உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் டைனசோர் காலடிச் சுவடுகள் பெருமளவில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 7, 2010


ஒரே திசையை நோக்கிய ஏறத்தாழ 3,000 டைனசோர் (தொன்மா) காலடிச் சுவடுகளைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக சீனாவின் தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


குறைந்தது ஆறு டைனசோர் இனங்களின் காலடிகள் என நம்பப்படும் இச்சுவடுகள் சீனாவின் கிழக்கு சாண்டோங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனாவின் அரசுச் செய்தி நிறுவனம் சின்குவா தெரிவித்துள்ளது.


இவை அனைத்தும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் இவை பெரும் இடப்பெயார்வு ஒன்றின் போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேறு மிருகங்களின் தாக்குதல்களினாலும் இவ்விடப்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.


சூச்செங் பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் டைனசோர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக சூச்செங் நகரம் "டைனசோர் நகரம்" என உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படுகிறது.


10 சமீ முதல் 80 சமீ வரை நீளமான இக்காலடிச் சுவடுகள் 2,600 சதுர மீட்டர் பரப்பளவு பிரதேசத்தில் மூன்று மாத கால ஆய்வின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக சின்குவா அறிவித்துள்ளது.

மூலம்[தொகு]