சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
Appearance
சீனாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 16 திசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது
- 13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவின் அமைவிடம்
செவ்வாய், அக்டோபர் 11, 2016
சீனாவின் வென்ஸோ பகுதியில் உள்ள லுச்செங் என்ற தொழிற்பேட்டையில் 6மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாயினர். இந்த தொழிற்பேட்டையில் பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
1970ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த 6 மாடி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளது. வாடகை குறைவாக இருக்கும் காரணத்தால் பலர் இந்த கட்டிடத்தில் வசித்து வந்துள்ளனர். மீட்புப் படையினர் முதல்கட்டமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலரை வெளியேற்றியதுடன் 22 உடல்களையும் கண்டெடுத்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மூலம்
[தொகு]- China building collapse kills at least 22, பிபிசி, அக்டோபர் 11, 2016
- 22 killed in China building collapse, சிஎன்என், அக்டோபர் 11, 2016