அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 16, 2024

அமெரிக்காவின் ஆளில்லாமல் இயக்கும் ஆராய்ச்சி நீர்மூழ்கியை தென்சீனக் கடலில் சீன கடற்படை கப்பல் கைப்பற்றியது. தென்சீனக் கடலில் பன்னாட்டு கடற்பரப்பில் தங்கள் நீர்மூழ்கி இருந்ததாக அமெரிக்கா கூறுகிறது.


அமெரிக்க கடல் நிலப்பரப்பு மதிப்பீட்டு கப்பல் போடிச் இம்நீர்மூழ்கியை நீருக்கடியில் இருந்து எடுப்பதற்குள் சீன கப்பல் இம்நீர்மூழ்கியை கைப்பற்றியது. சீனாவின் தாலாங் 3 ஆம் வகை கப்பலான ஏஎசுஆர்-510 போவிச்சின் 500 யார்டு தூரத்துக்கு வந்து நீர்மூழ்கியை கைப்பற்றியது.


இச்செயலால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் நிலையற்றதன்மையையும் இறுக்கத்தையும் விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.


கடல்மிதவை என்று பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கி கடலின் அமிலத்தன்மையையும் வெப்பத்தையும் கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.


சீனா தென் சீனக்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளதோடு அதில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுவியுள்ளது. அதன் நிழற்படத்தை அமெரிக்கா வெளியிட்டது மேலும் சீனா தென் சீனக் கடலை இராணவ மையமாக்கியுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு திரம்பு கூறியிருந்தார்.


இந்நிகழ்வு தென் சீனக்கடலில் பிலிப்பைன்சு நாட்டின் வடமேற்கிலுள்ள சுபிக் பே என்னும் இடத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் நடந்தது.


மூலம்[தொகு]