சுடோன்கென்ஞ்சைக் கட்டியவர்கள் விவசாயிகள் இல்லை; மேய்ச்சல்காரர்கள்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search


புதன், ஏப்ரல் 17, 2013

சுடோன்கென்ஞ்சைக் (Stonehenge) கட்டியவர்கள் விவசாயிகள் இல்லை என்றும், மேய்ச்சல்காரர்கள் என்றும் ஒரு புதிய ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது. அவர்கள் இறைச்சி உணவுகளை உண்டும், புலம் பெயர்ந்து திரியும் வாழ்வையும் கொண்டிருந்தனர். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயமே பிரித்தானிய தீவுகளில் (British Isles) முதலில் தோன்றி, பின் விலங்குகள் மேய்ச்சலுக்கு வழிவிட்டது என்கின்றனர்.

இந்த நிலப்பகுதியில் இலேசான, ஈரமான பருவம் உதயமாயின. அப்பொழுது எமர்த்தானியக் கோதுமை (emmer wheat), வாற்கோதுமை (barley), திராட்சைகள் (grapes) போன்ற மடுத்திரைப் பயிர்கள் (Mediterranean Crops) பிரித்தானிய தீவுகளில் அறிமுகமாயின. இதனை இங்கிலாந்தின் சாலிசுபரியில் (Salisbury) உள்ள வெசக்சு அகழாய்வியலில் (Wessex Archaeology) அகழாய்வு உயிரியலாளர் (Archaeobiologist) கிரிசு சிடீவன்சு (Chris Stevens)என்பரும், யுனிவர்சிட்டி காலேசு இலண்டனின் (University College London) டோரியன் புள்ளர் (Dorian Fuller) என்பவரும் தெரிவித்தனர். முதலில் உழுதலுடன், தோட்டங்களில் பழங்களும் விதைகளும் பரிந்த்து உணவுண்டு, அத்துடன் சில கால்நடைகளையும் வளர்த்து வந்தனர். பிறகு 5300 ஆண்டுகளுக்கு முன்பு கடும் குளிரும், நிலத்தில் உலர்வுத்தன்மை ஏற்பட்டதினால் விவசாயம் செய்ய இயலாமல், கால்நடை வளர்ப்பை அதிகரித்து வாழ்ந்து வந்தனர் என்று சிடீவன்சும், புள்ளரும் கூறினர். அவர்கள் செம்மறி, பன்றி, பசுக்கள் ஆகியவற்றை வளர்த்து வந்தனர் என்று செப்டம்பர் ஆண்டிகியூட்டியில் (Antiquity) வெளியிட்டனர்.

3500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் வெண்கலக் காலத்தில் திரும்பவும் விவசாயம் தலைத்தூக்கின. மேய்த்து இடம்பெயரும் வாழ்வு போயின.

6000 ஆண்டிற்கு முன்பும், 4000 ஆண்டிற்கு முன்பும் விவசாயம் செய்துள்ளனர். இந்த இரண்டுக் காலப்பகுதிக்குள் தான் இந்த சுடோன்கென்ஞ்சுப் போன்ற கல் நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன் தான் இவை கட்டத்தொடங்கியுள்ளனர். 4400 ஆண்டுகளுக்கு முன் இக்கற்கள் வேறு ஒரு இடத்திலிருந்து இழுத்துவரப்பட்டுள்ளது.

பழங்கால பிரித்தானிய மக்கள் பிறப்பு, இறப்பும், மறுபிறப்பும் கொண்ட நிலப்பகுதியில் வாழ்ந்தனர். அப்பொழுது அங்கு மேய்ச்சலுக்காக வந்த சிறு மேய்ப்பாளர் குழுவிடம் இணைந்து கட்டினார்கள் என சிடீவன்சும், புள்ளரும் கூறினர்.

இவர்கள் ஏன் இதனை கட்டினார்கள் எனபதற்கான கேள்விக்கு புள்ளர், “அவர்களின் குழுக்களுக்குள் ஏற்படும் திருமணம், நெடுதொலைவு செல்லும் பொழுது கால்நடைகளுக்கு தங்களுக்கு களைப்பாற்றவும், ஓய்வெடுக்கவும், விருந்துகள் நடத்தவும், பிற விழாக்களுக்கும் அவர்கள் இவ்வகையான கற்களை கட்டமைத்தனர்.” என்றார். இதனை ஒரு பெருங்கூட்டம் கட்டியிருக்க வேண்டும் என்றனர்.

”5000 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் பொருளாதாரம் மிக பலமானதாக இருந்தது. அதுவே அவர்கள் சுடோன்கென்ஞ்சு கட்டுவதற்கு ஏற்றதாக இருந்தன.” என போர்ன்மெளத் பல்கலைக்கழத்தின் டிமோத்தி டார்வில் கூறினார். அதன் பிறகே இக்கற்களை அவர்கள் எடுத்துவந்தனர்.

சுமார் 700 உண்வுகளை 198 இடங்களில் முன்பே ஆய்வு செய்ததின் அடிப்படையில் பிரித்தானிய தீவுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் செய்வதற்கான காலநிலை நன்றாக இருந்ததும், அவர்கள் தோட்டங்களில் பல பழங்களை பயிரிட்டனர் என்பதையும் வானலை கரிம காலக்கணிப்பின் மூலம் கண்டரிந்ததை சிடீவன்சும், புள்ளரும் எடுத்துரைத்தனர்.

3500 முன்பு பல புதிய பயிர்கள், அதாவது பட்டாணிகள், அவரைகள் மென்மாக் கோதுமை வகைகள் போன்றவை அறிமுகமாயின. இதற்கென தேக்கக்குழிகள், கூலக்களஞ்சியம் ஆகியவற்றை அக்கால மக்கள் உருவாக்கினர். அது ஒரு வெண்கலக் காலம்.

சிடீவன்சு, மற்றும் புள்ளர் ஆகியோரின் ஆய்வு அக்காலத்தில் உழுதலும், மேய்ச்சலும் எப்படி இருந்தன என்பதை விவரிக்கின்றன என்று வேல்சில் (Wales) உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தின் (Cardiff University) அலாசுடார் வித்தில் (Alasdair Whittle) கூறினார்.

மேலும் வித்தில், “விவசாயிகள் இதனைக் கட்டவில்லை என்றால் இக்கற்களை இழுத்துவந்தவர்கள் உழவர்களே“ என்றார்.

மூலங்கள்[தொகு]

  • C. Stevens and D. Fuller. Did Neolithic farming fail? The case for a Bronze Age agricultural revolution in the British Isles. Antiquity, Vol. 86, September 2012, p. 707.