உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியக் குடும்பத்துக்கு மிகக் கிட்டவான புறக்கோள் 'அல்ஃபா செண்ட்டாரி பிபி' கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 17, 2012

நான்கு ஒளியாண்டுகளுக்கு அப்பால் சூரியக் குடும்பத்திற்கு சற்று அப்பால் உள்ள அல்பா செண்டாரி என்ற விண்மீன்களில் ஒன்றை சுற்றி வரும் புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அல்பா செண்டாரி பிபி புறக்கோள்

பூமியைப் போன்ற எடையும், புதன் கோள் நமது சூரியனைச் சுற்றி வரும் தூரத்துக்குக் குறைவான தூரத்தில் அதன் சூரியனைச் சுற்றியும் வருகிறது. இதனால் அது "வாழத்தகுந்த வலயத்துக்கு" வெளியே இது அமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. நேச்சர் ஆய்விதழில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி ஆகும். இது அல்பா செண்டாரி ஏ, பி ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று-விண்மீன் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள் அல்பா செண்டாரி பி விண்மீனுக்குக் கிட்டவாகக் காணப்படுகிறது. இது சிலியில் அமைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தெற்கு வானாய்வகத்தில் அமைந்துள்ள ஆர்ப்சு தொலைநோக்கியூடாக அவதானிக்கப்பட்டுள்ளது.


தற்போது அறியப்பட்டிருக்கும் 840 புறக்கோள்களில் இதுவே பூமிக்குக் கிட்டவாக அமைந்துள்ளது. இது தனது சூரியனை 3.6 நாட்களுக்கு ஒரு தடவை சுற்றி வருகிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,200 செல்சியசு ஆகும். இதற்கு அல்ஃபா செண்டாரி பிபி (Alpha Centauri Bb) எனப் பெயரிடப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]