உள்ளடக்கத்துக்குச் செல்

சூரிய ஆற்றலில் இயங்கும் வானூர்தி தன் ஒன்பதாவது கட்ட பயணத்தில் கலிபோர்னியா வந்தடைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 25, 2016

சூரிய ஆற்றல் வானூர்தி

சூரிய ஆற்றலில் இயங்கும் சூரிய ஆற்றல் (சோலார் இம்பல்சு) வானூர்தி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மவுண்டன் வியூ என்னுமிடத்தில் தரையிறங்கியுள்ளது. பசுபிக் கடல் பகுதியில் மூன்று நாட்கள் 21 மணி நேரம் பயணித்த பின்னர் இந்த விமானம் அங்கு தரையிறங்கியது.


அவாயி தீவிலிருந்து புறப்பட்ட சூரிய ஆற்றல் வானூர்தியின் மெல்லிய மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள கலங்கள் சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன. 17000 ஒளி மின்கலன்கள் இதில் உள்ளது இதன் மூலம் லானூர்தி தனக்கா ஆற்றலை சூரியனிடமிருந்து பெறுகிறது. பகலில் வானூர்தியின் உந்தி ஒளி மின்கலன்கள் மூலம் ஆற்றல் பெறுகிறகிறது இரவில் இதன் ஆற்றல் சேமிக்கப்பட்டடுள்ள மின்கலன்கள் வானூர்தியின் உந்திக்கு உதவுகிறது.


சூரிய ஆற்றல் வானூர்தி 2015 ஏப்பிரல் மாதம் அமீரகத்திலுள்ள அபுதாபியிலிருந்து உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியது.


அவசரகாலத்திற்கு வானூர்தியை தரையிறக்க இடமில்லாததால் எட்டாவது & ஒன்பதாவது கட்டமான பசிபிக் கடலை கடப்பதே மிகக்கடினாமான ஒன்றாகும்


போயிங் 747 வானூர்தியின் இறக்கையை விட பெரிய இறக்கையை கொண்ட இந்த வானூர்தியின் எடை, அந்த போயிங் வானூர்தியின் எடையின் நூறில் ஒரு மடங்கிலும் குறைவானது. இதன் எடை 2.3 டன்களாகும்.


உலகை வலம் வரும் முயற்சியை அபுதாபியில் ஆரம்பித்த இந்த சூரியசக்தி வானூர்தி, தற்போது அதன் பயணத்தின் ஒன்பதாவது கட்டத்தில் உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதமே சூரிய ஆற்றல் வானுர்தியின் (சோலார் இம்பல்ஸின்) பயணம் துவங்கியிருந்தாலும், அதன் மின்கலங்கள் அதிகம் வெப்பமடைந்த காரணத்தால் திருத்த வேலைகளுக்காக 9 மாதம் அவாய் தீவிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது.


மூலம்

[தொகு]