உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 10, 2013

செவ்வாய்க்கு நாசா ஆய்வு மையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கியூரியோசிட்டி தரையுளவியால் வறண்ட ஏரி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஏரியின் தன்மைகள், வடிவங்களை வைத்துப் பார்க்கும் போது அங்கு நுண்ணியிர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

கேல் எரிமலைவாய் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் நீளம் 50 கி.மீ மற்றும் அகலம் 3 கி.மீ ஆகும்.

செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் அல்லது கியூரியோசிட்டி என்ற தளவுளவியின் மாதிரி வடிவம்

அந்த ஏரியின் மேற்புறத்தில் உள்ள பாறைகளின் வடிவங்களின் புகைப்படங்களை கலிபோர்னியா தொழில்நுட்பப் படிப்பகத்தின் ஆய்வாளர் ஜான் கிரோட்சிங்கர் ஆராய்ந்தார். இந்த ஏரி பல ஆயிரம் ஆண்டுகள் நன்னீரைக் கொண்டிருந்திருக்க வேண்டும் என அவர் மேலும் கூறி உள்ளார். இந்த ஏரி Chemolithoautotrophs எனப்படும் நுண்ணுயிரிகள் வாழத் தகுந்த வகையில் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

முதன்முறையாக செவ்வாய் கோளில் வைத்தே அந்த பாறைகளின் வயதை நாசா விஞ்ஞானிகள் கணக்கிட்டு சாதித்துள்ளனர். இருந்த போதும் உயிர்கள் வாழ்ந்தமைக்கான Total organic carbon பொருட்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்கள் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் மேலும் கிடைக்குமா என தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.


மூலம்

[தொகு]