செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 15, 2016

ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டுமுயற்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோளான எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் என்பதை கஜகஸ்தானில் உள்ள பைக்காரா விண்வெளி தளத்தில் இருந்து உருசியாவின் புரோட்டோன் எம் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக் கோள் குறிப்பாக செவ்வாயில் உள்ள மீத்தேனையும் மற்ற அரிய வாயுக்களையும் ஆராயும்.


இந்த செயற்கைகோள் 500 மில்லியன் கிமீ பயணித்து 7 மாதங்கள் எடுத்துக்கொண்டு செவ்வாய் கோளுக்கு செல்லும். செவ்வாய் கோளை அடைந்தாலும் தன்னை நிலைநிறுத்த தேவையான சரியான இடத்தை அறிய ஓர் ஆண்டு எடுத்துக்கொள்ளும். அதாவது 2017இன் இறுதியிலேயே செவ்வாய் கோளை ஆராய தொடங்கும். சுற்றுக்கலம் (செயற்கைகோள்) 4.3 டன் எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.


இசேப்அரெலீ என்ற ஆய்வுக்கலன் டிகேஆ என்ற டிஜிஓவில் பொருத்தப்பட்டுறள்ளது.. டிஜிஓ (ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர்) செயற்கைகோள் மட்டும் செவ்வாய் கிரகத்திற்க்கு மேல் பகுதியில் சுற்றிவந்து ஆய்வு செய்யும். இசேப்அரெலீ ஆய்வுக்கலம் நேரடியாக செவ்வாய் கோளில் தரையிறங்கி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் 2019லோ 2021லோ தலையிறங்கும் விண்கலனை பத்திரமாக மீட்க உதவும் கருவிகளை சோதிப்பது ஆகும்.


இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி மீத்தேன் வாயு இருந்தால் உயிரினங்கள் வாழ செவ்வாய் கோள் ஏதுவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள்னர்.


இந்த கூட்டு முயற்சி வெற்றியடைந்தால் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆய்வு கலன் ஒன்றை ரஷ்யாவும் ஐரோப்பாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும். இது 2018லோ, 2010லோ நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா இதற்கு முன்னர் செவ்வாய்கிரகத்துக்கு செல்ல மேற்கொண்ட 19 முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்தன.


நாசாவே ஐரோப்பிய விண் ஆய்வகத்தின் உண்மையான கூட்டாளியாகும். நிதிநெருக்கடியால் இத்திட்டத்தில் இருந்து 2012 பிப்பரவரி மாதம் விலகிக்கொண்டது. அடுத்த ஆண்டு ஐரோப்பிய விண் ஆய்வகம் உருசியாவின் விண் ஆய்வகமான ராசுகாசுமாசு உடன் நாசாவின் இடத்திற்கு பதிலாக உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டது.


மூலம்[தொகு]