சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 15, 2015

சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வமான ஐக்கிய ராச்சிய விண்வெளி வீரர் டிம் பீக்கெவுடன் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி நிலையத்தை நோக்கி பைகானூர் விண்வெளி தளத்திலிருந்து செவ்வாய் அன்று பயணப்பட்டது. இவர் ஐக்கிய ராச்சியத்தின் முன்னாள் இராணுவ வானோடியாவார்.


இவருடன் ருசியாவின் விண்வெளி வீரர் யூரி மலெசென்கோ, அமெரிக்க விண்வெளி வீரர் டிம் கோப்ரா ஆகியோரும் அனைத்துலக விண்வெளி நிலையம் நோக்கி பயணப்பட்டார்கள். விண்கலம் கிரீன்விச் இடைநிலை நேரம் 17.24 க்கு (23.24 கசகசுத்தான் நேரம்) நிலையத்துடன் இணையும்.


விண்கலம் 422.5 தள்ளுவிசைக்கு இணையான 26 மில்லியன் குதிரைத்திறனுடன் விண்வெளிக்கு உந்திச் சென்றது. விண்கலம் மணிக்கு 1000 மைல் (1600 கிமீ\மணி) வேகத்தில் பறந்தது. ஏவப்பட்ட ஓன்பது நிமிடம் கழித்து விண்கலம் புவியீர்ப்பு விசையை முழுமையாக கடந்தது.


பீக்கே ஆறு மாதங்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருப்பார். இப்போது சென்ற மூவர் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள மூவருடன் இணைந்துகொள்வார்கள்.


1991ம் ஆண்டு இங்கிலாந்து குடிமகள் கெலன் செர்மான் சோயசு விண்கலம் மூலமாக அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். டிம் மீப்கெவுக்கு முன் சென்ற ஐக்கிய ராச்சியத்தவர் அனைவரும் தனிப்பட்ட முறையில் அல்லது அமெரிக்கக் குடியுரிமை பெற்று நாசா மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் ஆவர்.


சென்ற மூவரும் அடுத்த ஆண்டு யூன் 5 அன்று பூமிக்குத் திரும்புவர். 1961இல் யூரி ககாரின் சென்ற அதே தளத்திலிருந்து இவ்விண்கலம் ஏவப்பட்டது.



மூலம்[தொகு]

  • [1] பிபிசி டிசம்பர் 15,2015
  • [2] ரியூட்டர்சு, டிசம்பர் 15,2015