சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 17 பெப்ரவரி 2025: இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு
- 17 பெப்ரவரி 2025: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 17 பெப்ரவரி 2025: சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது
- 17 பெப்ரவரி 2025: சவூதியில் 2003 தாக்குதலில் ஈடுபட்ட ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு
செவ்வாய், சனவரி 2, 2018
சௌதி அரேபியாவிலும் அமீரகத்திலும் இது வரை மதிப்பு கூட்டல் வரி இல்லை.பாறை நெய் விலை குறைந்ததால் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது அதனால் வருமானத்தை கூட்டல் வரியை முதன்முறையாக கொண்டுவந்துள்ளன. சனவரி 1, 2018 முதல் இவ்வரி நடைமுறைக்கு வருகிறது.
5% மதிப்பு கூட்டல் வரி பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல, டீசல் போன்ற எரிபொருட்களுக்கும் இவ்வரி உள்ளது. ஆனால் மருத்துவ சிகிச்சை, நிதி சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு மதிப்பு கூட்டல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வரி காரணமாக முதல் ஆண்டில், சுமார் 12 பில்லியன் திராம் (3.3 பில்லியன் டாலர்கள்) வருவாய் கிடைக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மதிப்பீடு செய்துள்ளது.
ஆனால், வருமான வரியை அமல்படுத்தும் எந்தவொரு திட்டங்களும் இருநாடுகளிடமும் இல்லை. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு 0 சதவீதம் வருமான வரியாக செலுத்துகின்றனர்.
செளதி அரேபியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருவாய் எண்ணெய் தொழிலிலிருந்து கிடைக்கிறது. ஆனால், அமீரகத்தில் அந்த வருவாய் என்பது தோராயமாக 80 சதவீதமாக உள்ளது. வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது.
வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளான பகுரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் மதிப்பு கூட்டல் வரி விதிப்புமுறையை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளன. ஆனால், அதில் சில நாடுகள் 2019 வரை இதுகுறித்த திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன.
மூலம்
[தொகு]- Saudi Arabia and United Arab Emirates introduce VAT for first time 01 பிபிசி சனவரி 2018
- Saudi Arabia, UAE introduce VAT for first time 01, டைம்சு ஆப் இந்தியா சனவரி 2018