சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 19, 2016

இளவரசர் துருகி பின் சௌட் அல்-கபிர் செய்த கொலை குற்றத்துக்காக அவருக்கு செவ்வாய் கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. சௌதி அரேபியாவில் 134 நபராக மரணதண்டனைக்கு ஆளானவர் இளவரசர் அல்-கபிர்.


அரச குடும்பத்தவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது அரிதாகும். 1975ஆம் ஆண்டு இளவரசர் பைசல் பின் முசையது அல் சௌத் தன் பெரியப்பா அரசர் பைசலை கொன்றதுக்காக நிறைவேற்றப்பட்டது தான் அரச குடும்பத்தினர் கடைசியாக பெற்ற மரணதண்டனையாகும்.


இளவரசர் அல்-கபிர் தன்னுடைய உதவியாளரை சுட்டதை ஒப்புக்கொண்டார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.


இவருக்கு எப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அமைச்சகம் தெரிவிக்கவில்லை. ஆனால் வாளால் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுவது தான் சௌதி அரேபியாவின் வழக்கம்.




மூலம்[தொகு]