ஞானேந்திரா மீண்டும் நேபாள மன்னராக முடி சூட விருப்பம் தெரிவித்துள்ளார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 8, 2012

2008 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நேபாள மன்னர் ஞானேந்திரா தாம் மீண்டும் நேபாள மன்னராக முடிசூடுவதற்கு விரும்புவதாக முதற் தடவையாக அறிவித்துள்ளார்.


முன்னாள் மன்னர் ஞானேந்திரா

நியூஸ்24 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 2006 ஆம் ஆண்டில் தாமே மன்னர் என்பதை அரசியல் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்ததாகவும், ஆனால் பின்னர் அப்போதை அரசு 2008 ஆம் ஆண்டில் மன்னராட்சியை இல்லாதொழித்தது எனவும் அவர் கூறினார். தாம் அரசியலில் பங்களிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் சம்பிரதாயபூர்வமான மன்னராகத் தாம் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.


நேபாளத்தில் தற்போது அரசியல் நெருக்கடி நிலவும் தருணத்தில் இவரது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கான உடன்பாடு ஒன்று எட்டப்படாமையால் அண்மையில் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் நவம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]