உள்ளடக்கத்துக்குச் செல்

டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 8, 2010


டைனசோர்களை பூமியில் இருந்து முற்றாக அழித்தது பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் தான் என்று உலக நாடுகளின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள்.


பூமியில் சிறுகோளின் தாக்கம் (வரைபடம்)

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த உயிரினங்களின் கிட்டத்தட்ட அரைவாசி அளவை முற்றாக அழித்த நிகழ்வு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கக்கூடிய 41 அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள்.


இந்த அழிவை ஏற்படுத்தியது சிறுகோளா அல்லது தற்போதைய இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் 1.5 மில்லியன் ஆண்டு காலமாக இடம்பெற்று வந்ததாகக் கருதப்படும் ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் (தக்காணத்துப் பெருங்குழி) போன்ற இயற்கை அழிவுகளா என்பதில் இதுவரையில் அறிவியலாளர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.


ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் "சயன்ஸ்" சஞ்சிகையில் இது குறித்து தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதன்படி, 15 கிமீ அகலமான சிறுகோள் ஒன்று பூமியை சிக்களப் பெருங்குழி (Chicxulub crater) என்ற (இப்போதைய மெக்சிக்கோவின்) பகுதியைத் தாக்கியதில் இவ்வுயிரினங்கள் அழிந்திருக்கின்றன.


ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.

—ஜொவான்னா மோர்கன், இம்பீரியல் கல்லூரி, லண்டன்

"இம்மோதுகையால் பூமியில் 10 ரிக்டர் அளவை விட மோசமான நிலநடுக்கங்கள், பெரும் தீ, நிலச்சரிவுகள், ஆழிப்பேரலை போன்றவை இடம்பெற்றிருக்கின்றன," என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஜொவான்னா மோர்கன் தெரிவித்தார்..


ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.


"சிறுகோளின் தாக்கம் டைனசோர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், பாலூட்டிகளுக்கு அது ஒரு "பெரும் நாளாக"க் கருதலாம்,' என இவ்வாய்வுகளில் பங்கெடுத்த கரெத் எவன்ஸ் தெரிவித்தார்.


"டைனசோர்களின் முடிவு பூமியின் வரலாற்றுக்கு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம். இது பூமியில் மனித இனம் பெருக வழிவகுத்துள்ளது", இவ்வாறு தெரிவித்தார் கரெத் எவன்ஸ்.

சிக்களப் பெருங்குழி (Chicxulub crater)
சிக்களப் பெருங்குழி (Chicxulub crater)
சிக்களப் பெருங்குழி (Chicxulub crater)
சிக்களப் பெருங்குழியின் ஈர்ப்பு வரைபடம்
சிக்களப் பெருங்குழியின் ஈர்ப்பு வரைபடம்
சிக்களப் பெருங்குழியின் ஈர்ப்பு வரைபடம்
சிக்களப் பெருங்குழியின் தாக்கம்
சிக்களப் பெருங்குழியின் தாக்கம்
சிக்களப் பெருங்குழியின் தாக்கம்


மூலம்

[தொகு]