தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூலை 5, 2014

ஆத்திரேலியாவின் வட-மேற்கேயுள்ள கடல் பகுதியில் 200 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்க ஆத்திரேலியா மறுத்து வருகிறது.


இந்தியப் பெருங்கடலில் இந்த இரண்டு கப்பல்களும் இடைமறிக்கப்பட்டதாகவும், இவற்றில் பயணம் செய்த சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பன்னாட்டுச் சட்டத்திற்கு முரணாக ஆத்திரேலியா நடத்துள்ளதென அகதிகளுக்காகக் குரல் கொடுப்போர் குற்றம் சாட்டினர். படகுகளில் இருந்தோரில் குறைந்தது 11 பேர் இலங்கையில் படையினரால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்கள் என அவர்கள் கூறுகின்றனர்.


கடல் வழியாக ஆத்திரேலியாவை அடையும் அகதிகள் மீது அந்நாட்டு கடுமையான அழுத்தங்களை அண்மைக் காலங்களில் பிரயோகித்து வருகிறது. இரண்டு படகுகளைத் தாம் வழி மறித்ததாகவோ அல்லது மறுத்தோ இதுவரையில் ஆத்திரேலிய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.


அகதிகளின் விண்ணப்பங்களை முறைப்படி பரிசீலிக்காமல் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவது பன்னாட்டுச் சட்டத்தின் படி சட்டவிரோதமானது என ஆத்திரேலியாவின் அகதிகளுக்கான பேரவை கூறியுள்ளது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg