தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது - கருத்துக் கணிப்பில் தகவல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 22, 2016


தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது முன்னிலை வகிப்பதாக கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.


தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து செயற்படும் புதிய தலைமுறை எனும் தொலைக்காட்சி நிறுவனம் தமிழகத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, அதில் தெரியவந்த விவரங்களை பிப்ரவரி 15 அன்று தனது சிறப்பு ஒளிபரப்பில் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 200 இடங்களில், ஏறத்தாழ 5018 வாக்காளர்களிடம் சனவரி 22 முதல் பிப்ரவரி 6 வரையான காலகட்டத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட வாக்காளர்களிடம் 14 கேள்விகள் முன்வைக்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மூலம்[தொகு]