தாய்வானில் 6.1 அளவு நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு
- 6 பெப்பிரவரி 2016: தைவானில் பெரும் நிலநடுக்கம், இடிபாடுகளிடையே பலர் மீட்பு
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
- 27 மார்ச்சு 2013: தாய்வானில் 6.1 அளவு நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்
- 23 திசம்பர் 2011: கிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகள், நூற்றுக்கணக்கானோர் இறப்பு
புதன், மார்ச்சு 27, 2013
இன்று புதன்கிழமை காலையில் தாய்வானை நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார்.
இன்று காலை உள்ளூர் நேரம் 10:03 மணிக்கு நான்டூ நகரில் 15.4 கிமீ ஆழத்தில் 6.1 அளவு நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 செக்கன்களுக்கு இந்த அதிர்வு உணரப்பட்டது. அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு 4.3 அளவிலான பல பின்னதிர்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஆரம்ப நிலநடுக்கம் 120 கிமீ தூரத்தில் தலைநகர் தாய்பெய்யில் உணரப்பட்டுள்ளது.
நன்டூ நகரில் கோயில் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 72-வயதுப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். தாய்வானின் மத்திய பகுதியில் 19 பேர் வரையில் காயமடைந்தனர்.
இரண்டு கண்டத்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் தாய்வான் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. 1999 ஆம் ஆண்டில் கடைசியாக இதே பகுதியில் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அப்போது 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம், ஏப்ரல் 26, 2010
மூலம்
[தொகு]- Earthquake Shakes Taiwan, Kills One, வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மார்ச் 27, 2013
- Video captures strong earthquake rattling Taiwan, வாசிங்டன் போஸ்ட், மார்ச் 27, 2013