திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், செப்டெம்பர் 2, 2009, லண்டன்:


இலங்கையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த திங்கட்கிழமை அன்று திசைநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தண்டனையை இலங்கை மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் கண்டித்திருந்தன.


பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை பன்னாட்டு மன்னிப்பு அவை (அம்னெஸ்டி இண்டர்நேஷனல்) என்கிற மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.


இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாய் மீது கறுப்புத்துணியை கட்டியிருந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

  • பிபிசி தமிழோசை