உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 20, 2024

துருக்கியின் உருசிய தூதர் ஆண்ரே கார்லோவ் துருக்கியின் தலைநகர் அங்காராவில் கலை கண்காட்சியை பார்த்துவிட்டு அங்கு பேசும் போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.


இதை செய்தவர் துருக்கியின் கலவர தடுப்பு காவலாளி 22 வயதுடைய மெவ்லுட் பெர்ட் அல்டின்டசு என்று தெரியவந்துள்ளது. கலவர தடுப்பு காவலாளி இல்லையென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. கொலையாளி அங்கேயே மற்ற காவலர்களால் சுடப்பட்டு இறந்தார்.


தூதரை சுட்டுவிட்டு சிரியாவில் உருசிய நடவடிக்கைக்கு எதிராக கொலையாளி குரல் கொடுத்தார். `துருக்கியர் பார்வையில் உருசியா' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட நேரத்தில் உருசிய தூதர் சுடப்பட்டார் என உருசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் காணொளி ஒளிப்பதிவைப் பார்த்தபோது, கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது எட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.


கார்லோவ் 1976இல் தூதரக பணிக்கு வந்தார் 2013 யூலை மாதம் துருக்கியின் தூதராக அறிவிக்கப்பட்டார். 1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார். 2001-ல் வடகொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார் 2006 வரை அப்பொறுப்பில் இருந்தார். 1979 முதல் 1991 வரை வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றிய தூதராக பணியாற்றினார்.


மூலம்

[தொகு]