உள்ளடக்கத்துக்குச் செல்

தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 4, 2018

வியாழக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9 மணி அளவில் போர்ட் எலிசபெத்திலிருந்து சோகன்சுபர்க் நகருக்கு சென்று கொண்டிருந்த சோசொலோசா மேய்ல் தொடருந்து நிறுவனத்துக்கு சொந்தமான தொடருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 14 பேர் பலியானார்கள். இவ்வி்பத்தில் சுமையுந்து ஓட்டுநர் பலியாகவில்லை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தொடருந்து நிறுவனம் விபத்து நடந்த சமயத்தில் தொடருந்தில் 429 பேர் இருந்தார்கள் என்றது ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் 730 பேர் இருந்தனர் என்றார்.


குரூன்சேட்க்கு அருகில் விபத்து ஏற்பட்டது, இது சோகன்சுபர்க் நகரிலுருந்து தோராயமாக 106 மைல் தொலைவில் உள்ளது, போர்ட் எலிசபெத்திலிருந்து 430 மைல் தொலைவில் உள்ளது.


மூலம்[தொகு]