தெற்கு ஏமனில் அல்-கைதா மீது தாக்குதல், 11 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், ஜனவரி 31, 2012

தெற்கு ஏமனில் அல்-கைதா போராளிகள் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் அல்-கைதாவின் உள்ளூர்த் தலைவர்கள் என உள்ளூர்ப் பழங்குடித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


எமனின் தெற்கே அபியான் மாகாணத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் அபியான் மாகாணத்தை இசுலாமியப் போராளிகள் தம் வசப்படுத்திருந்தனர். இவர்களை விரட்டுவதற்கு ஏமன் பாதுகாப்புப் படையினர் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. படையினர் தரப்பில் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன.


பாடசாலை ஒன்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற அல்-கைதா தலைவர்களின் தலைவர்களின் இரகசிய இரவு கூட்டம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் உள்ளூர்த் தலைவர் அப்துல் மோனெம் அல்-ஃபாத்தானி என்பவர் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்க விமானங்களே இத்தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg