தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்கு ''ரிங்டோன் போபியா'' ஏற்படும்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், ஏப்ரல் 21, 2014

செல்லிடத் தொலைபேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு புதிதாக பல நோய்கள் உருவாகிறது என்று மூளை நரம்பியல் துறை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மனிதர்கள் பல காரணங்களுக்காக பயத்தை வெளிக்காட்டும் குணத்தைக் கொண்டுள்ளார்கள். ஒவ்வோரு காரணத்திற்கும் போபியா என்னும் நோயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு ரிங்டோன் போபியா என்ற நோய் உருவாகுவதாக திருச்சி கி. ஆ. பெ. வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம் தெரிவிக்கிறார். தன்னை அறியாமலே ரிங்டோன் அடிக்கிறதா என்று பார்ப்பது, சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் போது செல்போனிலிருந்து வைப்பிரேசன் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் வந்ததாக நினைத்துக்கொண்டு தன்னிச்சைச் செயலாக நடந்து கொள்வது போன்ற காரணங்களால் பல தொந்தரவுகளுக்கு ஆட்படுகிறார்கள்.

மூலம்[தொகு]