நடன இயக்குனர் ரகுராம் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 30, 2013

பிரபல நடன இயக்குனர் ரகுராம் அவர்கள் இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 64. மாரடைப்பு காரணமாக இன்று நண்பகல் 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.


தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னனி நடன இயக்குனரான இவருக்கு கடந்த ஆண்டு, திரைப்படத்துறையில் வெற்றிகரமாக 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, திரைத்துறையினரால் விழா எடுக்கப்பட்டது. திரைத்துறையில் நான்கு தலைமுறைகள் கண்ட இவரும், கமலஹாசனும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். கடைசியாக, 2008ம் ஆண்டு இவரும் கமலஹாசனும் தசாவதாரம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர்.


நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இவரது மகள் ஆவார்.


மூலம்[தொகு]