நாசா செயற்கைக்கோள் 'கிரெயில்' நிலவின் சுற்றுப் பாதையில் இணைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 1, 2012

நாசா ஏவிய இரட்டை ஈர்ப்பு மீட்பு செயற்கைக்கோள்களில் ஒன்று நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.


கிரெயில், இரட்டைச் செயற்கைக்கோள்கள்

கிரெயில்-ஏ எனப்படும் இச்செயற்கைக்கோள் நேற்று சனிக்கிழமை அன்று நலவைச் சுற்றியுள்ள நீள்வட்டப் பாதையில் இணைந்தது. கிரெயில்-பி எனப்படும் மற்றை செயற்கைக் கோள் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த செயற்கைக்கோள்கள் நிலவின் உட்புறத்தை மிகத் துல்லியமாக அளவிடும் எனவும், இதன் மூலம் சிறப்பான முடிவுகளை வானியலாளர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. நிலவின் தோற்றம், மற்றும் நிலவின் கிட்ட, மற்றும் தூரப் பகுதிகள் ஏன் வேறுபட்டுக் காணப்படுகின்றன போன்றவற்றுக்கு விடை அறியப்படலாம் என வானியலாளர்கள் நம்புகின்றனர். நிலவின் மேற்பரப்புகளில் உள்ள சிறிய ஈர்ப்பு மாற்றங்களை கிரெயில் செயற்கைக்கோள் அளவிடும். இந்த இரட்டைச் செயற்கைக் கோள்கள் 2011 செப்டம்பர் 10 ஆம் நாள் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.


மூலம்[தொகு]