நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தோற்றம்
ஞாயிறு, மே 23, 2010
ஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானத்தின் பகுதிகள் என நம்பப்படும் பொருட்களை ஆத்திரேலிய செய்மதிகள் கண்டறிந்தன
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் அபோட் தலைமையில் லிபரல் கட்சி பெரும் வெற்றி
- 17 பெப்ரவரி 2025: மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்
ஆஸ்திரேலியாவின் அமைவிடம்
நாடு கடந்த தமிழீழ அரசின் ஆத்திரேலியாவுக்கான பிரதிநிதிகளின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் ஆறு பேர் போட்டி எதுவும் இன்றித் தெரிவானார்கள். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கான 4 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 6 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தல் நேற்று சனிக்கிழமை அம்மாநிலத்தில் நடைபெற்றது.
குலசேகரம் சஞ்சயன், சேரன் சிறிபாலன், தர்சன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஏனைய மாநிலங்களில் இருந்து போட்டியின்றித் தெரிவானோர் விபரம்:
- விக்டோரியா:
- பாலச்சந்திரன் ஜனனி
- சந்தியாப்பிள்ளை டொமினிக் சேவியோ
- சண்முகானந்தகுமார் துரைசிங்கம்
- குயின்ஸ்லாந்து:
- செல்வநாதன் இளையதம்பி
- தாஸ்மானியா மற்றும் ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்:
- விஸ்வநாதன் அபிராமி
- தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, வட மண்டலம்:
- மாணிக்கவாசகர் கனகேந்திரம்
மூலம்
[தொகு]- NSW representatives for the Constituent Assembly of TGTE, தமிழ்நசனல்.கொம், மே 23, 2010