நிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 28, 2012

நிக்கராகுவாவின் சான் கிறிஸ்தோபல் எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சீறத் தொடங்கியதை அடுத்து அதற்கு அண்மையில் 5 கிமீ சுற்றுவட்டத்தில் வசிக்கும் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


சான் கிறித்தோபல் எரிமலை

ஆனாலும், கிட்டத்தட்ட 1,500 விவசாயிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் 15 முறை எரிமலைக் கக்கல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். 500 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சீறல் காணப்பட்டது.


பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்புப் பணிக்கென இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.


சான் கிறிஸ்தோபல் நிக்கராகுவாவின் மிகப் பெரும் எரிமலை ஆகும். இது தலைநகர் மனாகுவாவில் இருந்து வடமேற்கே 135 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த எரிமலை சீறியதில் பண்ணை விலங்குகள் பல உயிரிழந்தன.


மூலம்[தொகு]