உள்ளடக்கத்துக்குச் செல்

நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 14, 2009நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த மாதம் நிலவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெற்றியளித்திருப்பதாக நாசாவின் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


நிலவின் தென்முனையில் பனிக்கட்டிகளை எடுப்பதற்காக ராக்கெட் ஒன்றை நாசா சென்ற மாதம் மோதவிட்டது. மோதலின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பெருமளவு நீர்-பனிக்காட்டிகளும் நீராவிகளும் அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.


"நாம் சிறிதளவை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; குறிப்பிடத்தக்களவு தண்ணீரைக் கண்டுபிடித்துள்ளோம்" என்று தலைமை அறிவியலாளர் அந்தனி கொலப்பிரெட் தெரிவித்தார்.


நிலவில் இவற்றைவிடப் பெருமளவு தண்ணீர்ர் இருப்பதற்கான அறிகுறிகள் மேலும் தென்பட்டால், நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளிவீரர்களுக்கு இது பெருமளவு பயனைக் கொடுக்கும்.


"இதனைக் குடிநீராகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது." எனத் தெரிவித்தார் நாசாவின் நிலவாய்வுத் திட்டத்தின் தலைமை வானியலாளர் மைக் வார்கோ.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்