உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 25, 2009


நேபாளத்தின் தென் பகுதியில் பாரா மாவட்டத்தில் பரியாப்பூர் என்ற ஊரில் உள்ள காதிமை என்ற இந்துக் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் 300,000 ஆடுகள், மாடுகள் மற்றும் எருமைகள் பலியிடப்பட்டன. மிருகங்களின் ரத்த வெள்ளத்தில் இக் கோவிலின் சிறப்பு பூஜை நடைபெற்றது.


காதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். கிட்டத்தட்ட 750,000 பேர் இந்தியாவில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.


திருவிழா தொடங்கும் முன்பு காதிமை அம்மனின் புகழ் நீடுழி வாழ்க என பக்தர்கள் உரக்க கூக்குரலிட்டனர். பின்னர் இந்த கோவிலின் தலைமை பூசாரி 2 எலிகள் 2 புறாக்கள் மற்றும் ஆடு பன்றியை பலியிட்டார். பிறகு கோவிலிலுக்கு அருகேயுள்ள வயலுக்கு விலங்குகளை வெட்டி பலியிடும் 250 பேர் ஊர்வலமாக சென்றனர். இங்கு அவர்கள் தங்கள் பலியை தொடந்தனர்.


நேபாளத்தில் கிட்டத்தட்ட 81 விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்

பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக காணிக்கையாக வழங்கிய ஆடு மாடுகளை வரிசையாக வெட்டி சாய்ந்தனர். இவற்றில் 20 ஆயிரம் எருமை மாடுகள் மற்றும் 3லட்சம் ஆடுகள் கோழிகள் அடங்கும். இதனையடுத்து விசேட பூஜைகள் நடத்தப்பட்டது.


இதற்கிடையே மிருகவதை கூடாது என மிருகங்கள் பாதுகாப்பு உரிமை அமைப்பினர் பிரசாரம் செய்தனர்.


இது போன்று பலி கொடுப்பதால் தங்களின் குறைகளை காதிமை அம்மன் தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே மக்களின் உணர்வை மதிக்கிறோம் என்று கூறி இந்த பலியை தடைசெய்ய அரசு மறுத்து விட்டதுமல்லாமல், இத்திருவிழா நடத்த ரூ.45 லட்சம் ஒதுக்கியுள்ளது.

மூலம்

[தொகு]