நேப்பாளப் பிரதமர் சாலா நாத் பதவி விலகினார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 15, 2011

நேப்பாளப் பிரதமர் ஜாலநாத் கனால் தனது பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.


பிரதமர் கனால்

61 வயதான கனால், கடந்த பிப்ரவரி 3 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளத்தில் மாவோயிஸ்ட் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தம், முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி மற்றும் சொந்தக் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி என்பவற்றால் பிரதமர் சாலா நாத்தின் பதவி விலகல் நேர்ந்துள்லது. அவரது முக்கிய கூட்டணி கட்சியான மாவோயிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியும் அவரைப் பதவி விலகும்படி வலியுறுத்தி வந்தன.


எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக அவர் தனது பதவியைத் துறந்துள்ளதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலை அரசுத்தலைவர் ராம் பாரன் யாதவ் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய பிரதமர் தேர்ந்து எடுக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராக நீடிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என அரசுத்தலைவரின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர தகால் தெரிவித்தார்.


நேபாள காங்கிரசும், மாவோயிஸ்ட் கட்சியும் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க போட்டி போடுகின்றன. மாவோயிஸ்ட் சார்பில் கட்சி துணை தலைவர் பாபுராம் பட்டாரய், காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் துபே, போத்யால் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதால் நேபாளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மூலம்[தொகு]