படகு அகதிகளை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு
- 6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது
- 19 திசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
திங்கள், ஆகத்து 8, 2011
ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்த அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு ஆத்திரேலிய உச்ச நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. இவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் குறித்து மேலும் ஆராயப் படவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இம்மாத இறுதியளவில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரை அகதிகள் பரிமாற்ரம் நிறுத்தி வக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 800 சட்டவிரோத அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பும் ஆத்திரேலிய அரசின் திட்டம் நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலால் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலியா கிலார்டின் அரசு மலேசிய அரசுடன் செய்துகொண்டுள்ள உடன்பாட்டின் படி, மலேசியாவில் அகதிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4,000 பேரை ஆத்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் மலேசியாவிற்கு முதலாவது தொகுதியாக 16 அகதிகளை இன்று காலை 11.30 மணிக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது. இவர்கள் அனைவரும் ஆப்கானித்தான், மற்றும் பாக்கித்தான் நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை தங்களுக்கு துன்பம் விளைவிக்கப்படும் என்று அகதிகள் அஞ்சுகின்றனர் என்று அவர்கள் சார்பில் பேசவல்ல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து தெரிவித்தனர்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது, மே 8, 2011
- அகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம், சூன் 3, 2011
மூலம்
[தொகு]- Australian court halts Malaysia asylum deal, பிபிசி, ஆகத்து 8, 2011
- Court upholds injunction on asylum seekers, மெல்பேர்ண் ஏஜ், ஆகத்து 8, 2011