பனிப்பாறைகள் நியூசிலாந்தை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 27, 2009


கிட்டத்தட்ட 100 பனிப்பாறைகள் நியூசிலாந்தை நோக்கி நகர்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து தெற்கு பசிபிக் பெருங்கடலில் செல்லும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அண்டார்க்டிக்காவில் உள்ள பனிப்பாறைகளே உருகி அங்கிருந்து பிரிந்து நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் சில 200 மீட்டர் (650 அடி) உயரமானவை ஆகும்.


இப்பனிப்பாறைகளின் பெரும்பாலானவை நியூசிலாந்தின் கரையை அடைய முன்னரே உருகிப் பிரிந்துவிடும் என அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இதே போன்றதொரு பனிப்பாறை நகர்வு கடைசியாக 2006 ஆம் ஆண்டில் அவதானிக்கப்பட்டது.


"இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு இது ஒரு சாதாரண எச்சரிக்கை தான்" என நியூசிலாந்து அரசு கடற்போக்குவரத்தின் பேச்சாளர் ரொஸ் எண்டர்சன் தெரிவித்தார்.


இந்த பனிப்பாறைகள் கடலில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு 700 கிலோ மீட்டர் பரப்பளவில் மிதந்து வருகின்றன. பனிப்பாறைகள் கடலில் பயணி ப்பது செய்மதி மூலம் தெரியவந்து உள்ளது.

மூலம்[தொகு]