பயனர் பேச்சு:Info-farmer

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
வணக்கம்

Greenlight.gif உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். Crystal Clear app xfmail.png (tha.uzhavan ->gmail->com)

|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|

பாரதியும் ரௌடியும்[தொகு]

வணக்கம் தகவலுழவன், நீங்கள் இங்கு இட்டிருந்த பாரதியும், ரௌடியும் பற்றிய தொகுப்பு விக்கிசெய்திகளில் இடம்பெறத் தகுதியானதாகத் தெரியவில்லை. இதனை விக்கிமூலத்தில் அல்லது விக்கிநூல்களில் இடலாம் என நினைக்கிறேன். செய்திகள் ஏதாவது தாருங்கள்:).--Kanags \பேச்சு 02:09, 12 செப்டெம்பர் 2009 (UTC)

  • இனி விக்கி மூலங்களில் அதனைச் செய்கிறேன். மழை இல்லாத காரணங்களால் 50,000 எக்டரில் விவசாயம் பாதிப்பு? என்பது போல வட்டாரச் செய்திகளை அனுப்பலாமா? விபத்து குறித்த செய்திகள்?எத்தகைய செய்திகளை அனுப்ப வேண்டும் என்பதில் எனக்குத் தெளிவில்லைத*உழவன் 09:42, 14 செப்டெம்பர் 2009 (UTC)
எந்தச் செய்தியானாலும் பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எதையும் தரலாம். வட்டாரச் செய்திகள், விபத்து, அறிவியல், எதுவானாலும் தரலாம். முதற்பக்கத்தில் உள்ள செய்திகளைப் பாருங்கள். ஆங்கிலச் செய்திகளை தமிழில் சுருக்கமாக மொழி பெயர்த்துத் தரலாம் (மூலங்களைக் குறிப்பிடுங்கள்). உங்கள் "பாரதியும் ரவுடியும்" என்ற கட்டுரையை விக்கிமேற்கோளில் இடலாம். நன்றி.--Kanags \பேச்சு 10:15, 14 செப்டெம்பர் 2009 (UTC)

முதல்பக்கம்[தொகு]

தகவலுழவன், முதல்பக்கம் குறித்த கருத்துக்களுக்கு நன்றி. "தமிழ் விக்கிகளின் செய்திகள்" என்ற புதிய பகுதி சேர்க்கலாம். முதல் பக்கத்தில் அதற்கு இடம் ஒதுக்கித் தரலாம். என்ன செய்திகள் தரவேண்டும்? உங்களிடம் இப்போதைக்கு செய்திகள் இருந்தால் தாருங்கள். முதல் பக்கத்தில் தருகிறேன். ஆனால் அதனை வாரம் ஒரு முறை தானும் update செய்வீர்களா? அதற்குப் பொறுப்பெடுப்பீர்களா?--Kanags \பேச்சு 07:12, 2 ஜனவரி 2010 (UTC)

Orange pog.svg முதறபக்கத்தில் தமிழ் விக்கிகளின் செய்திகள் என்ற புதிய பகுதியை சேர்ப்பது குறித்து மகிழ்ச்சி.

  1. 10 நாட்களுக்கு ஒருமுறை, விக்சனரியில் என்ன நடந்தது என்பதை என்னால் தர இயலும்.
  2. எத்தனைச் சொல் புதியதாக பங்களிக்கப்பட்டது என்பதையும்.
  3. மேலும் சிறப்பாக பங்களிக்கப் பட்டு இருக்கும் சொல் ஒன்றையும்,
  4. புதிய பயனர் வருகை இருப்பின் அவரைப் பற்றியும்(அவரது ஒப்புதல் தேவைப்படின், அதனுடனும்)
  5. வேறு முக்கிய நடப்புகளைப் பற்றியும்,

அறிக்கையொன்றினைத் தர இயலும்.

இதே போன்ற அறிக்கை மற்ற தமிழ் சகோதரத்திட்டங்களில் தரப்பட்டால், அனைத்துத் திட்டங்களிலும் பலரது கவனம் குறைந்த நேரத்தில் கிடைக்கும். பலரும் பலத் திட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பை இதன் மூலம் அதிகரிக்கலாம்.

(உ.ம்)விக்கி நூல்களில் நடந்த கடைசிப்பதிவு, திசம்பர் 6க்கு பிறகு(உங்கள் பதிவு- குறுந்தொகை)இதுவரை 4புதிய பயனர் வந்துள்ளனர். அவர்களுக்கு வரவேற்பு கூட அளிக்கப் படவில்லை.சனவரி 2இல் என் பயனர் பக்கத்தில் சில விவரங்களைப் பதிவு செய்துள்ளேன். அவ்வளவே. பல வேலைகளுக்கும் நடுவில், உங்களின் குறுந்தொகை என்னையும் தூண்டியுள்ளது. நன்றி.

மாதம் ஒரு முறையேனும், இத்தகைய அறிக்கைகளை அனைத்து சகோதரத்திட்டங்களில் திரட்டினால் அது பல பலன்களை அளிக்கும் வாய்ப்பு உள்ளதென எண்ணுகிறேன்.

முடிந்தவரை தமிழகச் செய்திகளிலும், இனி கவனம் செலுத்துவேன். மேலும், பல நாட்டுத் தமிழர் பற்றியும், தமிழ் தளங்கள் பற்றியும் பலரை பங்களிக்கத் தூண்டலாம். இவைகளுக்குரிய தொடுப்புகளை, முதற்பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன்.

பலருக்கு நேரமின்மையால், வீட்டில் வாங்கும் தினசரிகளின் முதற்பக்கத்தினை மட்டும் பார்த்துவிட்டு செல்லும் பழக்கம் உண்டு. விக்கிச்செய்திகள், ஒரு வரவேற்பு அறை போல இருக்க எண்ணுள் ஆசை. த*உழவன் 23:41, 2 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=39941" இருந்து மீள்விக்கப்பட்டது