பயனர் பேச்சு:Kanags
தலைப்பைச் சேர்வாருங்கள், Kanags!
விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
--உமாபதி 03:43, 3 டிசம்பர் 2006 (UTC)
"ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது" என்னும் தலைப்பில் செய்தி ஒன்றை எழுதியுள்ளேன். இதனை எவ்வாறு முதற்பக்கத்தில் இணைப்பது? Mayooranathan 06:26, 31 ஜூலை 2009 (UTC)
Adminship
[தொகு]You are now an admin here. Best wishes for the project. Sj
- Thanks Sj.--Kanags \பேச்சு 12:05, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- வாழ்த்துகள், பாராட்டுகள் சிறீதரன் கனகு! --செல்வா 13:55, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
வாழ்த்துகள் கனகு. உங்கள் சீரிய பங்களிப்பில் தமிழ் விக்கி செய்திகள் அருமையாக வளர்ந்து வருகிறது.--Ravidreams 11:15, 24 செப்டெம்பர் 2009 (UTC)
- நன்றி செல்வா, ரவி.--Kanags \பேச்சு 13:11, 24 செப்டெம்பர் 2009 (UTC)
நாய் மரபணுக்கள்
[தொகு]நீங்கள் இக்குறிப்பை பல்வேறு வகையில் செப்பம் செய்து சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. வரும் நாட்களில் 2-3 நாட்களுக்கேனும் ஒருமுறை நல்ல செய்தி ஒன்றை எழுதித்தர விரும்புகிறேன். விக்கிச் செய்திகளில் பகுப்புகள் முதலியன இன்னும் புரிந்து கொள்ளவில்லை. விரைவில் ஓரளவுக்கு கற்றுக்கொள்கிறேன். --செல்வா 13:55, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
Closure proposal and Mediawiki:sitenotice
[தொகு]Hi Kanags, I just wanted to let you know that the proposal to close this project (on meta wiki) has been rejected and closed as Keep. Whenever you get a chance you can remove the site notice telling people about it by clearing Mediawiki:sitenotice. Good luck going forward! Jamesofur 07:18, 30 நவம்பர் 2009 (UTC)
Thanks...
[தொகு]... for welcoming me. I am an active user in Spanish Wikipedia, Spanish Wikinews and Wikimedia Commons. You will find me there easily. ×α£đ~es 15:46, 4 ஜனவரி 2010 (UTC)
நன்றி
[தொகு]நன்றி ;) தனியாளாக நின்று கலக்குறீங்க.. நாங்களும் வந்து சேர்ந்துட்டம் :D
தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது எழுதுவோம் என்று யோசிக்கின்றேன் --ஜெ.மயூரேசன் 12:46, 8 ஜனவரி 2010 (UTC)
தகவல் சட்டம்
[தொகு]நான் எழுதிய செய்தி இலங்கை தகவல் சட்டத்தில் தோன்றவில்லையே?? கைமுறையாக ஏதாவது நாங்கள் செய்யவேண்டுமா?? --ஜெ.மயூரேசன் 11:01, 9 ஜனவரி 2010 (UTC)
Lead Article and Breaking News
[தொகு]நான் ஒரு லீட் வார்ப்புருவைத் தொகுத்ததுடன் அதில் பிரேக்கிங் நியூஸ் என்றும் சேர்த்தேன். இவ்வாறு செய்வதற்கு ஏதும் நிபந்தனைகள் இருக்கின்றதா? செய்துமுடித்த பின்னர்தான் செய்திருக்கலாமா என்று யோசித்தேன் :) --ஜெ.மயூரேசன் 12:04, 13 ஜனவரி 2010 (UTC)
- Breaking News என்பதற்கு சூடான செய்திகள், உடனடிச் செய்தி, பிந்தய செய்தி என்று பல வருகின்றது.. ஆனால் சரியாக நச் என்று ஒன்று வருதில்லை.. விகசன்றி குழுமத்தில் கேட்போமா? --ஜெ.மயூரேசன் 12:33, 13 ஜனவரி 2010 (UTC)
செய்தியோடை 2
[தொகு]1. IE, 2. Firefox, 3. Google Chrome இதுதான் தற்போதைய ஒழுங்கு. பீட்பேணர் அப்படி நேரம் பிந்துவது ஏனோ தெரிவில்லை. எனது வலைப்பதிவெல்லாம் விரைவிலேயே மாறுகின்றதே??? சில நாட்கள் பார்த்துவிட்டு சரியானால் மீள பீட்பேணர் போட்டால் நன்று அதுவரை பழைய முகவரியையே பேணுவோம் --ஜெ.மயூரேசன் 12:38, 13 ஜனவரி 2010 (UTC)
வார்ப்புரு
[தொகு]இங்கு எவ்வாறு வார்ப்புருவை உருவாக்குவது? ஆங்கில விக்கிநியுசிலிருந்து வார்ப்புரு:picture select என்னும் வார்ப்புருவை உருவாக்க நினைத்தேன். --Kurumban 19:45, 27 பெப்ரவரி 2010 (UTC)
Request for Botflag
[தொகு]Hello,
Twice, I resquested bot blog for my bot GrondinBot. It makes interwiki links and can initialize catégory and Wikinews date pages. Can you see my request? Thanks : request.--Grondin 21:41, 28 பெப்ரவரி 2010 (UTC)
- The request is done. Congratulation for your good work in this project. In the beginning I was alone in french wikinews, too.-- Bertrand GRONDIN → (écrire) 1 mars 2010 à 12:40 (UTC)
சிறப்பு விண்மீன் பதக்கம்
[தொகு]சிறப்பு விக்கிப்பீடியர் | ||
கனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --21:45, 1 மார்ச் 2010 (இந்திய நேரம்) |
Category date
[தொகு]hello,
thanks for your support. Would you want that mon Bot initialize Category date and archives date ? --Grondin 12:15, 2 மார்ச் 2010 (UTC)
- March category a initialized with interwikis. Can you see it ? Thanks.--Grondin 15:48, 2 மார்ச் 2010 (UTC)
Wikinews archive date
[தொகு]I can use my bot for archive date. So, do you news DynamicPageList extension ? By example, this list all page in this category : மார்ச் 2
Code source :
<DynamicPageList> category=Published category=மார்ச் 2, 2010 notcategory=விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் suppresserrors=true </DynamicPageList>
List me, please, what categories that must not be in the liste (In development, for deletion…)--Grondin 15:57, 2 மார்ச் 2010 (UTC)
Archive Date
[தொகு]I propose two new features for archive date, before creating them. See my SandBox. Tell me what is your choice. My Bot scrip is ready for running. After creation, interwiki are added in the other project.--Grondin 17:45, 2 மார்ச் 2010 (UTC)
- I've initialized the 3 first months. Then I've modify வார்ப்புரு:நடப்புச் செய்திகள் to display the 7 last days. See, now the main page. Revert me if you don't agree. --Grondin 12:38, 3 மார்ச் 2010 (UTC)
Initialization
[தொகு]Hi,
I've initialized category date and archive date for april, may and june. Interwiki links are done.--Grondin 21:51, 5 மார்ச் 2010 (UTC)
பங்களிப்பு
[தொகு]சிறீதரன் கனகு, நான் விரைவில் இங்கு வந்து பங்களிக்கிறேன். ஒரு கிழமையில் (வாரத்தில்) இரண்டு செய்திகளாவது இட வேண்டும் என எண்ணியிருந்தும், இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் இன்னும் பங்களிக்க வில்லை. செய்தியியல் பயிலும் மாணவர்க்ளையும் ஈடுபடச் செய்ய ஏற்பாடுகள் செய்வேன். இப்பொழுது உலக மொழிகளில் விக்கி செய்தி 22 ஆவதாக உள்ளது. முதல் 10 இல் வர நல் வாய்பு உள்ளது. மயூரநாதன் விக்கிப்பீடியாவில் தனியாக முதலில் உழைத்தது போல நீங்கள் இங்கு உழைத்து வருவதைப் பாராட்ட நினைத்தாலும், கூட வந்து உதவுவதே அப்பாராட்டைத் தெரிவிக்கும் விதமாகும். சற்றே பொறுத்திருங்கள்..வந்துவிடுவேன்..--செல்வா 22:28, 13 மார்ச் 2010 (UTC)
மூலம்
[தொகு]மூன்று = குறி இடுவதற்கு பதில் இரண்டு = குறி இடலாமே ஓரு கோடு (hr) கிடைக்குமே. செய்திக்கான துணை என்று பிரித்தறிய (readability) இலகுவாக இருக்குமே ? - மாகிர் 09:04, 5 ஏப்ரல் 2010 (UTC)
Hello.
[தொகு]Congratulations on your great work here in the Tamil Wikinews. I'm certainly most active on the English Version :P Could you translate my userpage to Tamil, to make users from this Wikipedia more familiar with me :) And if you have time, please translate this too. Obviously, if you don't want to, no worries :) Cheers. --Diego Grez 00:47, 16 மே 2010 (UTC)
- Done! :) --Diego Grez 21:24, 16 மே 2010 (UTC)
- Aaand, can you tell me what does this says? :) --Diego Grez 21:56, 16 மே 2010 (UTC)
Proposal
[தொகு]Please take a look at http://ta.wikinews.org/wiki/Wikinews:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D#Flagged_revisions :) --Diego Grez 21:43, 22 மே 2010 (UTC)
சிறிதரன், மேற்கண்ட செய்தி ஆய்வு (revision), நம்பகத்தன்மை, நடுநிலைமை சரிபார்ப்பு போன்றவை தமிழ் விக்கசெய்திகளுக்கு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். அவசியம் இதனை பரிசீலிக்கவும். -- மாஹிர் 16:33, 23 மே 2010 (UTC)
Social bookmarks
[தொகு]Please remove the <!-- things on Template:Published, then, add the following code to MediaWiki:Common.js:
//Twitter/facebook etc. See [[template:Social bookmarks]] //makes stuff in id="social_bookmarks" open in new window //and dynamically re-writes links to twitter to shorten urls var newSmallPopup = function(url) { return (function () { window.open(url, "_blank", "width=640,height=480,menubar,resizable,scrollbars,status,toolbar"); return false; }); } addOnloadHook(function () { var soc = document.getElementById('social_bookmarks'); if (soc) { var links = soc.getElementsByTagName('a') for (i=0;i<links.length;i++) { if ( links[i].href.indexOf("http://twitter.com/?status") === 0) { /*isTwitter*/ links[i].href = "http://twitter.com/?status=" + encodeURIComponent("Look what I found on Wikinews: http://enwn.net/+" + wgArticleId); //enwn.net is owned by ShakataGaNai } links[i].onclick = newSmallPopup(links[i].href); }}});
Then, you should clean your cache. Let's see if it works =) --Diego Grez 01:49, 5 ஜூன் 2010 (UTC)
அருமை!
[தொகு]செய்திகள் என்பன உடனுக்குடன் சுடச்சுட தருவது இயற்கை என்றாலும், அறிவியற்செய்திகளும், மற்ற தரமான செய்திகளையும் விக்கியில் இடுவது ஒவ்வொன்றும் வரலாற்றுப் பதிவு. உங்கள் இடைவிடாத உழைப்பும், ஈடுபாடும் யாருக்கும் பேரூக்கம் தரும்.--செல்வா 13:43, 24 ஜூலை 2010 (UTC)
படங்கள் சேர்ப்பது
[தொகு]விக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா ? --Inbamkumar86 08:54, 29 ஜூலை 2010 (UTC)
- தங்கள் உதவிக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி . இனிவரும் பதிவுகளில் நான் அதனை நிச்சயம் கவனிக்கிறேன் . --Inbamkumar86 10:59, 29 ஜூலை 2010 (UTC)
Dynamic page list வழு
[தொகு]சிறீதரன், https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=25012 இந்த தொடுப்பை பாருங்கள். நான் விளக்கியது சரியா? மாஹிர் 14:07, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- கட்டுரைகளில் திருத்தம் செய்யும்போது மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால் வார்ப்புருக்களில் திருத்தும் போது மாற்றம் ஏற்படுகிரது. உதாரணத்திற்கு சோமாலியா வார்ப்புருவை அல்லது சோமாலியா வலைவாசலை எடுத்துக் காட்டலாம். பொதுவாக ஆங்கில விக்கிச் செய்திகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கடந்த செய்திகளில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கும் அது போன்று கட்டுப்படுத்துவது நல்லது. எப்படிச் செய்வது?--Kanags \பேச்சு 14:36, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். http://en.wikinews.org/wiki/Wikinews:Water_cooler/technical#archiving_tamil_wikinews . விக்கிசெய்தியில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உதவிக்காக நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. செய்திகள் போடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் தொழில்நுட்ப உதவிகள் செய்யலாமில்லையா?. உங்களது கருத்து என்ன? -- மாஹிர் 14:25, 3 செப்டெம்பர் 2010 (UTC)
Re: Supernova
[தொகு]It seems that TIFF is not fully supported yet. I just uploaded a JPEG version, so try with File:Shock wave around supernova 1987A (captured by the Hubble Space Telescope).jpg, it should work. I'm glad the image is useful to someone :) Tryphon 11:13, 6 செப்டெம்பர் 2010 (UTC)
இப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன + பிற செய்திகள்
[தொகு]சிறீதரன், இப்பொழுது தலைப்புகள் சரியான அளவில் உள்ளன (எழுத்துகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமலும், மேற்பகுதி வெட்டுப்படாமலும் தெரிகின்றன). முன்பு என் திரையில் தெரிந்தது என் இண்ட்டர்நெட் எக்ஃசுப்ளோரர் குறையா, அல்லது வேறு ஏதேனுமா அறியேன். நீங்கள் மாற்றங்கள் ஏதும் செய்தீர்களா என்றும் பார்க்கவில்லை, ஆனால், இப்பொழுது பக்க அமைப்பு எடுப்பாகவும், தெளிவாகவும் உள்ளது. (முதுகில் திமில் உள்ள தொன்மா கண்டுபிடித்திருக்கிறார்கள், இறால் வகை உயிரினங்களைக் கொல்லும் புதிய இறால்கொல்லி உயிரினம் உருவாகியிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். புதிய குரங்கு இனம் ஒன்று கண்டு பிடித்திருக்கிறார்கள், இசைக்கு ஏற்ப அசையும் ஒளிநாரும், மின்னழுத்தம் தந்தால் துடிக்கும் ஒளிநார்களும் (பீசோ-மின்சாரம் -அமுக்கத்தால் தூண்டப்பெறும் மின்னழுத்தமும் அதன் எதிர்விளைவாய், முன்னழுத்தம் தந்தால் அமுக்கமுற்று உருமாறும் தன்மையும்), உலகத்திலேயே மிகப்பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் தொடங்க இருக்கின்றார்கள்(நோபலியர் அமர்திய சென் தலைமையில் இத்திட்டம்), புதிய கண்ணாடி இழுவைகள் (jellyfish).. இப்படி ஏராளமாக கிளர்ச்சியூட்டும் செய்திகள் உள்ளன. எழுதி இங்கு அளிக்கத் துடிப்பு இருக்கும் அளவுக்கும், நேரமோ, உழைப்போ இல்லை! புதிய குரங்கினம் பற்றி எழுதலாம் என்றுதான் முன்னேற்பாடாக துள்ளுகுரங்கு கட்டுரையைத் தொடங்கினேன். அதனையும் இன்னும் நிறைவு செய்யவில்லை (!). விரைவில் உங்களுடன் சேர்ந்து மிகச்சிறிதளவாவது பங்களிக்கின்றேன். --செல்வா 23:30, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்கள் தொண்டு ஒப்பற்றது!! --செல்வா 23:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)
புதிய பக்கம்
[தொகு]நீங்கள் சுட்டிக்காட்டிய வழு சரிசெய்திருக்கிறேன். பயனர்:Mahir78/முதற் பக்கம் 2 என்றும் ஒன்று உருவாக்கியிருக்கிறேன். அடிக்கடி 3 அல்லது 2 பெட்டிகளில் மட்டும் படத்துடன் கொடுத்தால் (New lead articles) தற்போதைக்கு உங்களது தினமும் செய்யும் வேலை குறையும். உங்களது ஆலோசனையை கூறவும். -- மாஹிர் 15:45, 29 செப்டம்பர் 2010 (UTC)
ஆர்க்கிவ் பக்கங்கள்
[தொகு]கனகு, archive வார்ப்புருவில் dpl உபயோகிக்கவில்லையே. அதில் சாதாரண html களே இருக்கிறது. அதனை மொழிப்பெயர்த்து உபயோகிக்கலாம். அதில் காக்கப்பட்டது என்கிற பகுப்பு இருக்கவேண்டும். அப்புறம், defaultsort உபயோகித்திப்பிறகு தேதி வழு வருகிறதா? -- மாஹிர் 14:29, 4 அக்டோபர் 2010 (UTC)
- ஆர்க்கிவ் வார்ப்புருவில் dpl பாவிக்கவில்லை. ஆனாலும், published ஆன கட்டுரை ஒன்றில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால், அது இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருக்களில் (உ+ம்: நாடு வார்ப்புருக்களில், வலைவாசல்களில்) அண்மைய செய்தியாக மாறுகிறது. ஐந்து, ஆறு மாத செய்தி டுவிட்டரில் புதிய செய்தியாக வருகிறது. defaultsort இப்போது பாவிக்கிறேன். மாற்றம் ஏற்படுகிறதா என சோதிக்க வேண்டும்.--Kanags \பேச்சு 20:25, 4 அக்டோபர் 2010 (UTC)
முதற் பக்கம்
[தொகு]கனகு, முதற் பக்கத்தை இங்குள்ளதுபோல் சிறிது மாற்றி மாற்றிவிடலாமா? --மாகிர் 12:33, 30 அக்டோபர் 2010 (UTC)
தள அறிவிப்பு
[தொகு]தள அறிவிப்பில் சென்னை நிகழ்வினை நீக்கிவிட்டு, திருச்சி, புதுச்சேரி நிகழ்வுகளை இணைக்க வேண்டுகிறேன்.--Sodabottle 15:30, 12 பெப்ரவரி 2011 (UTC)
Main page Header
[தொகு]Hi, I saw there is an clear space on main page header, you can change this line in Common.css file :
background-image:url('http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Wikinews_banner_2.png');
to this:
background-image:url('http://upload.wikimedia.org/wikipedia/commons/1/17/Wikinews_banner_22.png');
Thank you very much Mjbmr 15:49, 12 பெப்ரவரி 2011 (UTC)
- Thanks Mjbmr.--Kanags \பேச்சு 23:58, 12 பெப்ரவரி 2011 (UTC)
- You're Welcome Mjbmr 15:01, 13 பெப்ரவரி 2011 (UTC)
- anyways i saw main page doesn't corrected that's because there is the same class in this css file, you can correct it or can remove and put all css class in main css file which starting with a dot, so it can be accessible in anywhere, thanks Mjbmr 20:36, 13 பெப்ரவரி 2011 (UTC)
- also for hiding the name of main page change this in மீடியாவிக்கி:Common.css/முதற்_பக்கம் :
- anyways i saw main page doesn't corrected that's because there is the same class in this css file, you can correct it or can remove and put all css class in main css file which starting with a dot, so it can be accessible in anywhere, thanks Mjbmr 20:36, 13 பெப்ரவரி 2011 (UTC)
- You're Welcome Mjbmr 15:01, 13 பெப்ரவரி 2011 (UTC)
#firstHeading, #footer-info-lastmod { display: block; }
to this:
#firstHeading, #footer-info-lastmod { display: none; }
- Thank you Mjbmr 21:15, 13 பெப்ரவரி 2011 (UTC)
தட்டச்சு கருவி
[தொகு]கனக்ஸ், விக்கிப்பீடியாவில் இணைத்த தட்டச்சு கருவியை இப்போது விகசனரியிலும் இணைத்தாயிற்று. அடுத்து இங்கும் இணைத்து விட வேண்டுகிறேன். அதற்கு தேவையான செயல்முறை பின்வருமாறு:--Sodabottle 15:24, 25 பெப்ரவரி 2011 (UTC)
தட்டச்சுக்கருவியை இணைக்க ஐந்து கோப்புகளில் மாற்றம் தேவை:
புதிதாக மூன்று மீடியாவிக்கி பக்கங்கள் உருவாக்க வேண்டும். விக்கிப்பீடியாவில் உள்ள மூலங்கள்: 1) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:Transli.js
பின்வரும் இரு பக்கங்களில் ஏற்கனவே விக்கி செய்திகளில் இருந்தால் கூடுதல் உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டும். இல்லையெனின் உருவாக்க வேண்டும்.
தயவுசெய்து நீக்கிவிடவும்
[தொகு]தவறுதலாக இர்பான் பதான் பக்கத்தை விக்கி செய்தியில் பதிவேற்றம் செய்துவிட்டேன். தயவுசெய்து நீக்கிவிடவும். - புன்னியாமீன்
RSS Feed
[தொகு]Hello, sorry for that problem, i don't know anything about FeedBurner, may you can find your answer here, BTW i sent the source on that tool to Bawolff, which is hosted here, if got any problem with that please contact him. Thank you. Mjbmr 16:05, 10 ஏப்ரல் 2011 (UTC)
வழிமாற்றுகள்
[தொகு]மாத வழிமாற்றுகளை முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஜனவரி 2010 - ஜூன் 2011 காலகட்ட பக்கங்களுக்கும் பகுப்புகளுக்கும் சூன்/சூலை/ஆகத்து/திசம்பர்/சனவரி பெயர்களில் வழிமாற்றுகள் ஏற்படுத்தியுள்ளேன். செல்வாவின் translatewiki மாற்றங்கள் இன்னுமொரு 10-12 மணி நேரம் இருக்கும் (சூர்யாவின் மீளமைத்தல் இங்கு வரும் இடைவெளியில்) இதில் சோதித்து வழிமாற்றுகள் போதுமா, வேலை செய்கின்றனவா, முறியும் பக்கங்கள் எவை என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு விக்கி செய்திகள் பழக்கமில்லை என்பதால் எங்கு எது முறிகிறது என்று தெரியவில்லை.--Sodabottle 15:48, 2 சூன் 2011 (UTC)
ஐயம்
[தொகு]எனது பராமரிப்பில் ஒரு இணையதளம் உள்ளது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன், அதில் உயிரியல் செய்திகள் வெளியிடுவதுண்டு. அவற்றின் மூலம் பல்வேறுபட்ட (ஆங்கில) செய்தி இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் எழுதும் அத்தகைய செய்திகளை எனது தளத்திலும் இட்டு இங்கும் இடலாமா? எனது இணையதள உரிமம் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License. --Drsrisenthil 10:38, 10 ஜூன் 2011 (UTC)
- கட்டாயம் தாருங்கள். ஆங்கில மூலச் செய்திகளின் இணைப்புகளையும் தந்து செய்தியையும் தாருங்கள். படங்கள் ஏதும் இணைப்பதென்றால், விக்கி கொமன்சில் (விக்கி பொது) ஏதேனும் படங்கள் இருந்தால் தேடி கட்டுரையில் சேர்க்கலாம். படங்களை இங்கு தரவேற்ற முடியாது. உங்கள் செய்திகளை எதிர்பார்க்கிறேன். மேலும், RSS செய்தியோடை தற்போது வேலை செய்கிறது. நன்றி.--Kanags \பேச்சு 11:16, 10 ஜூன் 2011 (UTC)
- உலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு எனும் செய்தி எழுதியிருந்தேன், அறிவியல் செய்திகளின் கீழ் இணைத்தால் நன்று.--Drsrisenthil 17:20, 16 ஜூன் 2011 (UTC)
விடுகை
[தொகு]தம்பி, சில வேலைகள் காரணமாகவும், இந்தியா செல்லவுள்ளமையினாலும் 16 ஜூலை 2011 வரை செய்திகள் தரமுடியாதிருக்கும் - புன்னியாமீன், 2 ஜூலை 2011
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Kanags,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
பழைய செய்திகள்
[தொகு]அமெரிக்கா-மெக்சிகோ மின்தடை, எகிப்தில் இஸ்ரேல் தூதரக தாக்குதல் மற்றும் சில செய்திகளை எழுதலாம் என்றால் அவற்றை இன்றைய தேதி உள்ள பகுப்பில் இடுவதா அல்ல செய்தி நிகழ்ந்த அன்றைய தேதி பகுப்பில் இடுவதா?
- வணக்கம், எந்தச் செய்தியானாலும் எழுதப்படும் அல்லது வெளியிடப்படும் (எந்த நாள் பிந்தியதோ) அத்தேதியின் பகுப்பினுள்ளேயே இடுதல் வேண்டும். செய்திகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 21:40, 10 செப்டம்பர் 2011 (UTC)
தட்டச்சுக் கருவி
[தொகு]கனக்ஸ்,
தட்டச்சுக் கருவியை விக்கி செய்திகளில் நிறுவும் வழு பதியப்பட்டுள்ளது. சில நாட்களில் நிறுவப்படும் என எதிர்பார்க்கிறேன்.--Sodabottle 16:33, 3 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி பாலா. அது பெரும் உதவியாக இருக்கும்.--Kanags \பேச்சு 20:26, 3 அக்டோபர் 2011 (UTC)
- நிறுவி விட்டார்கள். உதவிப்பக்கம் மட்டும் உருவாக்கப்படவேண்டும்.--Sodabottle 13:44, 4 அக்டோபர் 2011 (UTC)
கேள்விகள்
[தொகு]மீன்பிடிப்பு என்பது தொழில்நுட்பத்தின் உள் பகுப்பு என்பதால், அதையும் இதில் இடுவது தேவை இல்லை இல்லையா? அப் பகுப்புக்கு உள்ளவற்றை தானாக காட்சிப்படுத்த வேண்டும் எனினின் அதன் உட் பகுப்புகளுக்குள் உள்ளவற்றையும் காட்சிப்படுத்துவதற்கான தெரிவு (option) அனெகமாக இருக்கும். --Natkeeran2 01:03, 9 அக்டோபர் 2011 (UTC)
அறிவியலும் தொழில்நுட்பமும் என்று வலைவாசலை நகர்த்தி விடவும்.
நன்றி. --Natkeeran2 15:00, 9 அக்டோபர் 2011 (UTC)
- மீன்பிடிப்பு என்பதன் தாய்ப்பகுப்பு தொழில்நுட்பம். மீன்பிடிப்பு பகுப்பில் உள்ள கட்டுரைகள் வார்ப்புரு:தொழில்நுட்பம் வார்ப்புருவில் காட்டப்பட வேண்டுமென்றால் தொழில்நுட்பம் பகுப்பும் கட்டுரையில் இணைக்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறே இப்போது வார்ப்புருக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் வலைவாசலை நீங்கள் கூறியவாறு நகர்த்தி விடலாம். மேலும், கட்டுரைகளை எழுதும் போது கட்டுரை எழுதப்படும் நாளையே date வார்ப்புருவில் தாருங்கள். எவ்வளவு பழைய செய்தி என்றாலும் செய்தி விக்கிசெய்தியில் வெளியிடப்படும் நாளே date வார்ப்புருவில் தரப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 21:19, 9 அக்டோபர் 2011 (UTC)
தொழில்நுட்பம் உட்பகுப்புக்கள் எவற்றிலும் புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை தொழில்நுட்பம் பெட்டியில் தொழில்நுட்பம் என்ற பகுப்பு போடாமல் செய்ய முடியும் என்று நினைக்கிறன். அவ்வாறு செய்யலாமா? முறையாக வகைப்படுத்தப்படுவது நேர்த்தியாக அமையும். --Natkeeran2 01:19, 10 அக்டோபர் 2011 (UTC)
- ஆங்கில விக்கிசெய்தியிலும் அனைத்துக் கட்டுரைகளும் தாய்ப்பகுப்பில் இடப்பட்டுள்ளன. அங்கு தொழில்நுட்பத்துக்கெனத் தனிப்பகுப்பு இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற பகுப்பே உள்ளது. நாம் இங்கு அறிவியல் என்ற தாய்ப்பகுப்புடன் மட்டும் தொடங்கி விட்டோம்.--Kanags \பேச்சு 03:49, 10 அக்டோபர் 2011 (UTC)
- சரி அப்படியே செய்யலாம். ஆனால் அறிவியல், தொழில்நுட்பம் என்று வேறாக இருப்பது பொருத்தமே. --Natkeeran2 13:42, 10 அக்டோபர் 2011 (UTC)
Kanags, தமிழ் விக்கிப்பீடியாவில் என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதினால் எதிர்வரும் சில தினங்களுக்கு செய்திகள் தர முடியாமல் இருக்கும். P.M.Puniyameen 27.01,2012
- கொஞ்ச காலமாக விக்கி செய்திகள் செயல்படாமல் உள்ளதே?--Muthuppandy pandian (பேச்சு) 05:40, 12 நவம்பர் 2014 (UTC)
சந்தேகம்
[தொகு]வணக்கம்,
நான் இன்று செய்திகளில் பங்களிக்கலாம் என்று வந்து பலவற்றில் தேடி [[கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கிய ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்]] இவ்வாறு உருவாக்கலாம் என ஆரம்பித்தேன்.. ஆனால் ஆரம்பிக்கும்போதே
பழுதுள்ள தலைப்பு கோரப்பட்ட பக்கத்தின் தலைப்பு செல்லாது, வெறுமை, அல்லது பிழையாக இணைக்கப்பட்ட மொழிகளிடை அல்லது விக்கியிடைத் தலைப்பாகும். முதற் பக்கம் பக்கத்துக்குத் திரும்பு. இவ்வாறு வருகிறது. தலைப்பிடுதலில் ஏதாவது கொள்கை விக்கி செய்திளில் உள்ளதா? மற்றும் விக்கி செய்திகளில் எவ்வளவு வரிகள் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் ஏதாவது இருந்தால் கூறவும்.--Shanmugamp7 (பேச்சு) 02:32, 29 பெப்ரவரி 2012 (UTC)
உதவி
[தொகு]வணக்கம் , வெற்றிகரமாக செய்திக்கட்டுரையை உருவாக்கி விட்டேன்.. அது எவ்வாறு உள்ளது?.. ஏதேனும் பிழைகள் உள்ளனவா? என கூறினால் மேலும் செய்திகள் உருவாக்கும் போது வசதியாக இருக்கும்.. நன்றி--Shanmugamp7 (பேச்சு) 08:49, 29 பெப்ரவரி 2012 (UTC)
வேண்டுகோள்
[தொகு]வணக்கம், இந்தியா லண்டன் ஒலிம்பிக் போட்டியை பகுதியாக புறக்கணிக்க முடிவு [1] [2] [3] [4] ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. மேலும் அது தவறாக வெளிவந்தது என தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அதனை சரிசெய்யவும்.. அல்லது நீக்கி விடவும்.. இந்தியா புறக்கணிக்கப் போவதில்லை என்றே இன்றைய செய்தித் தாள்களில் வந்துள்ளன... நன்றி.--Shanmugamp7 (பேச்சு) 03:58, 3 மார்ச் 2012 (UTC)
- நன்றி சண்முகம், அச்செய்தியில் திருத்தம் செய்திருக்கிறேன்.--Kanags \பேச்சு 05:29, 3 மார்ச் 2012 (UTC)
- மிக்க நன்றி kanags.. அப்படியே உங்கள் பேச்சுப் பக்கத்தை தொகுப்பில் போட்டுவிடுங்களேன் :).. கொஞ்சம் பெரியதாக இருக்கிறது :)..--Shanmugamp7 (பேச்சு) 07:07, 3 மார்ச் 2012 (UTC)
நிலநடுக்கம் குறித்த மாற்றம்
[தொகு]சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை, செய்தியில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன். கவணிக்கவும். --Dineshkumar Ponnusamy \பேச்சு 11 ஏப்ரல் 2012.
நன்றி
[தொகு]வணக்கம் kanags.. Editor, Auto review அனுமதி வழங்கியமைக்கு மிக்க நன்றி.. மற்றொரு வேண்டுகோள்..
== interface-gadgets == * SocialMedia[ResourceLoader|default]|SocialMedia.js *UTCLiveClock|UTCLiveClock.js
மேலேயுள்ள வரிகளை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்களேன்... இதன் மூலம் பக்கங்களை பகிர்தல் மற்றும் கடிகாரம் ஆகிய பயனர் இடைமுகப்பு கருவிகளை பெற இயலும் என நினைக்கிறேன்..--shanmugam (பேச்சு) 10:12, 17 ஏப்ரல் 2012 (UTC)
- இங்கிருந்து அவற்றுக்கான ஜாவா ஸ்க்ரிப்டை நகலெடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பாலா மற்றும் ஸ்ரீகாந்திடம் அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டுமா என கேட்டு கூறுகிறேன்... பிறகு சேர்த்து விடலாம்.. தொந்தரவுக்கு மன்னிக்கவும்--shanmugam (பேச்சு) 10:18, 17 ஏப்ரல் 2012 (UTC)
- அந்த பக்கத்தை நிர்வாகிகள் மட்டுமே தொகுக்க இயலும் kanags.. மேலும் clock பிரச்சினையில்லை, சரியாக வேலை செய்கிறது... பகிர்தலில் மட்டும் twitter ல் பகிர குறுந்தொடுப்பு வசதி செய்திகளுக்கு இல்லையாதலால் 140 எழுத்துகளை தாண்டிவிடுகிறது..அதை மட்டும் ஸ்ரீகாந்திடம் கேட்க வேண்டும் :) (குறிப்பு:இதை கருவிகளில் சேர்க்க வேண்டாம் என்றால் தனிப்பயன் js மூலம் தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம்.. கருவிகளில் சேர்க்கலாமா? வேண்டாமா?)--shanmugam (பேச்சு) 10:39, 17 ஏப்ரல் 2012 (UTC)
- டுவிட்டரில் https://twitter.com/#!/tamil_wikinews இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை யார் இணைத்தார்கள் என்பது தெரியவில்லை. மாஹிர் ஆக இருக்கலாம். அவருக்கு நிருவாக அணுக்கம் உள்ளது.--Kanags \பேச்சு 10:50, 17 ஏப்ரல் 2012 (UTC)
- ஏற்கனவே உள்ளதால் பகிர்தல் கருவி முழுவதும் தேவையில்லை என நினைக்கிறேன் (அது தானாகவே feeds மூலம் இற்றையாகிறது போலிருக்கிறது).. நேரங்காட்டி மட்டும்தேவை.. அதற்கு மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js பக்கத்தில் w:ta:மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js இங்கிருந்து நகலெடுத்து சேர்த்து விட்டு == interface-gadgets == *UTCLiveClock|UTCLiveClock.js இதை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்கள்.--shanmugam (பேச்சு) 11:19, 17 ஏப்ரல் 2012 (UTC)
- நன்றி kanags.. சரியாக வேலையும் செய்கிறது.. நீங்களும் வேலை செய்கிறதா என கருவிகளில் தேர்வுசெய்து பாருங்கள்..--shanmugam (பேச்சு) 11:37, 17 ஏப்ரல் 2012 (UTC)
Re: Tamil wikinews bot request
[தொகு]Hello. I know that there's no 'crats at ta.wikinews, I already decided to request the flag on Meta in 19 September. Thanks for reminding me.--Avocato (பேச்சு) 10:00, 14 செப்டம்பர் 2012 (UTC)
திறனாய்வு நிலுவை...
[தொகு]வணக்கம்!
பிரேசில் விபத்துக் குறித்த செய்திக் கட்டுரையில் இற்றை செய்தேன். அதன் பிறகு புதிய மூலத்தை சேர்க்கும்போது... முதலில் செய்யப்பட்ட இற்றை, திறனாய்வு செய்யப்படவேண்டியது இருப்பதால்... புதிய இற்றை எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்ன செய்வது? 'எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா? விளக்கவும்! --மா. செல்வசிவகுருநாதன் 13:54, 28 ஜனவரி 2013 (UTC)
- நீங்கள் உங்கள் விருப்பப்படி இற்றைப்படுத்துங்கள். எடிட்டர் அணுக்கம் உள்ள ஒருவர் அதனை மேற்பார்வையிட்டு முறைப்படி இற்றைப்படுத்த முடியும். ஓரளவு பழைய (3,4 நான்கு நாட்களுக்கு முன்னையது) செய்திகளை இற்றைப்படுத்த வேண்டாம். தேவைப்படின் அவற்றுக்குப் புதிய செய்திகளை எழுதலாம். நன்றி.--Kanags \பேச்சு 20:25, 28 ஜனவரி 2013 (UTC)
தமிழக செய்தித் தொகுப்புகள்
[தொகு]வணக்கம்; தங்களின் ஊக்குவித்தலுக்கு நன்றி!
தமிழகம் தொடர்பான செய்திகளைத் தொகுப்பதன் மூலமாக இங்கு கற்றுக்கொண்டு, பிறகு நாடு, கண்டம், உலகம் என்பதாக விரிந்து போகலாம் என எண்ணியுள்ளேன். இப்போது தமிழகத்தின் சூடான செய்தி - கமலின் திரைப்படம். அதனால்தான் தினந்தோறும் 'விஸ்வரூபம்'!
சில சந்தேகங்கள்:
- ஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் இடையே இரண்டு 'வெற்று வரி'களை விடுவதன் நோக்கம் என்ன?
- “ ” எனும் குறிக்குப் பதிலாக " " எனும் குறியினை நீங்கள் பயன்படுத்தியதன் காரணம் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் 15:00, 31 ஜனவரி 2013 (UTC)
தங்களின் பதிலினை எனது பேச்சுப் பக்கத்தில் படித்தேன்; இரண்டு 'வெற்று வரிகள்' விடுவதனை நாம் தொடரலாம்!
சனிக்கிழமையன்று, பயணித்ததால் செய்தித் தொகுப்பினை எழுதவில்லை. நான் எழுத நினைத்ததை ஞாயிறன்று நீங்கள் எழுதிவிட்டீர்கள் (விஸ்வரூபம்). எனவே விரிவாக்கம் மட்டும் செய்துள்ளேன்.
ஒரு சந்தேகம்: நாம் தமிழில் எழுதும் ஒரு செய்தித் தொகுப்பு, ஆங்கில மொழி விக்கிசெய்தியில் இருந்தால்...அப்பக்கத்திற்கு 'பக்க இணைப்பு' தரலாமா? (விக்கிப்பீடியாவில் நாம் செய்வது போல) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 3 பெப்ரவரி 2013 (UTC)
வணக்கம்!
'தானாகவே சரிபார்க்கும்' உரிமையை எனக்கு வழங்கியமைக்கு நன்றி.
ஒரு சந்தேகம்: ‘இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சயின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ எனும் தலைப்பினைக் கொண்டு நான் ஒரு தொகுப்பினை துவக்கியபோது ‘பழுதுள்ள தலைப்பு’ எனும் அறிவிப்பு வந்தது. எனவே தலைப்பின் நீளத்தை சற்றுக் குறைத்து ‘இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ என எழுதினேன். இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது! அதிகபட்சமாக எத்தனை எழுத்துக்களை (including space) விக்கிசெய்திக் களம், ஒரு தலைப்பாக ஏற்றுகொள்ளும்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 7 பெப்ரவரி 2013 (UTC)
தலைப்பினை திருத்தியமைக்கு நன்றி!
தலைப்பினை எழுதும்போது மிகுந்த கவனத்தை எப்போதும் செலுத்துகிறேன். நீண்ட தலைப்பினை தவிர்க்க எண்ணியே 'தலைவர்கள்' என எழுதிவிட்டேன். மேலும் 'leaders arrested' எனும் அர்த்தத்திலேயே அங்ஙனம் எழுதினேன். ஆனால், உங்களின் திருத்தமே சரி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 14 பெப்ரவரி 2013 (UTC)
ஆலோசனை தேவை
[தொகு]வணக்கம்!
வாய்ப்பு கிடைக்கும்போது, நேரடியாகச் சென்று நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பினை எழுதலாம் என எண்ணியுள்ளேன். அப்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் யாவை? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 1 மார்ச் 2013 (UTC)
- நல்ல முயற்சி. ஆங்கில விக்கிசெய்தியில் தேடினேன். விக்கிசெய்தி:Original reporting ஐப் பாருங்கள். இதனைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.--Kanags \பேச்சு 10:50, 2 மார்ச் 2013 (UTC)
முதற் பக்க இற்றை
[தொகு]வணக்கம்!
முதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத்தாழ 1 மாத காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 22 மார்ச் 2013 (UTC)
பிரேரணை...
[தொகு]'பிரேரணை' எனும் சொல்லை இலங்கைத் தமிழ் வழக்கில் பயன்படுத்தி வருவதனை மிக அண்மையில் கவனித்தேன்; 'resolution' (தீர்மானம்) என்பதனைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுதலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் தரும் பொருளினை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விளக்குவீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 22 மார்ச் 2013 (UTC)
- பிரேரணை என்ற சொல்லை proposal, motion என்பதற்குப் பதிலாக அதிகம் இலங்கை ஊடகங்களில் பயன்படுத்துவார்கள். பதிலாக முன்மொழிவு நல்ல சொல்.--Kanags \பேச்சு 06:35, 26 மார்ச் 2013 (UTC)
மணல்தொட்டி...
[தொகு]வணக்கம்!
என்னுடைய வசதிக்காகத்தான் சொல்கிறீர்கள் என்றால்... எனக்கு 'மணல்தொட்டி' தான் வசதி. இதை நான் ஒரு சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒரு தொகுப்பினை நான் எழுதி முடிப்பேனா என்பது உறுதியில்லை; தேநீர் இடைவேளையின்போதும், உணவு இடைவேளையின்போதும் எழுதி வைத்துக்கொள்கிறேன். நேரம் அனுமதித்தால்... தொகுப்பினை நிறைவுசெய்து பதிப்பிக்கிறேன். தொகுப்பினைத் துவக்கி, பின்னர் பாதியில் விட்டுவிடுவது முறையல்ல; அடுத்தநாள் தொடர்ந்து முடித்தால்... பழைய செய்தியாகிவிடும். எனவேதான், நான் 'மணல்தொட்டி' பயன்படுத்துகிறேன்.
வேறு ஏதேனும் விதிமுறை/நடைமுறை சிக்கல்கள் இருப்பின் சொல்லுங்கள்... மாற்றுவழியை நாடுகிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 26 மார்ச் 2013 (UTC)
- தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஓரிருவர் மட்டுமே பங்களிக்கும் விக்கிசெய்தியில் இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், நீங்கள் ஒரு செய்தியை மணல்தொட்டியில் எழுதத் தொடங்கினால், வேறு யாராவது அதே செய்தியை முதன்மைத் தலைப்பில் எழுதினாலே சிக்கல் எழும். ஐநா மனித உரிமை செய்தியை எழுதத் தொடங்கும் போது நீங்கள் ஏற்கனவே உங்கள் மணல்தொட்டியில் எழுதத் தொடங்கி விட்டதைக் கவனித்தேன். நீங்களும் பொதுவில் எழுதியிருந்தால் நானும் பங்களித்திருக்க முடியும் என்பதாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன். உங்களுக்கு எது வசதியோ அவ்வாறே எழுதுங்கள்.--Kanags \பேச்சு
உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எனது மணல்தொட்டியில் இருக்கும் எந்தத் தகவலும் உங்களின் முன்னெடுப்புகளில் பாதிப்பினை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் தாராளமாக அச்செய்தித் தொகுப்பினை எழுதலாம்; நான் தவறாக நினைக்கப்போவதில்லை! தேவைப்பட்டால், நேரமிருப்பின்... உங்களால் எழுதப்படும் தொகுப்பினை விரிவு செய்துகொள்வேன். நான் ஏற்கனவே தெரிவித்தபடி, ‘ஒரு தொகுப்பினை நான் முடிப்பேன் என்பது உறுதியன்று!’ (சென்னையின் நெரிசல்மிக்க போக்குவரத்தில் ... காலையில் 1.5 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் தினந்தோறும் பயணிக்கிறேன்; அலுவலகத்தில் 9 மணிநேரம் பணிபுரிய... 3.5 மணிநேரம் பயணம்செய்யும் நிலையில் இன்றைய சென்னை இருக்கிறது!)
புரிதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:28, 26 மார்ச் 2013 (UTC)
ஒரு வேண்டுகோள்
[தொகு]வணக்கம்!
முதற் பக்கத்தில் 'முதன்மை செய்தித் தொகுப்பு 1'இல் தோன்றும் பிழையை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். (படிமம் தோன்றாமல், செய்தித் தலைப்பே இருமுறை தோன்றுகிறது.) நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 28 மார்ச் 2013 (UTC)
- அறியப்படுத்தியதற்கு நன்றி. குறிப்பிட்ட படிமத்தை பொதுவில் இருந்து நீக்கி விட்டார்கள். பொதுவில் இருந்து படிமம் ஒன்றை நீக்கும் போது பொதுவாக அப்படிமம் இணைக்கப்பட்ட பக்கங்கள் கொண்ட விக்கிகளுக்கும் எச்சரிக்கை தருவார்கள். இம்முறை எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.--Kanags \பேச்சு 07:43, 28 மார்ச் 2013 (UTC)
நன்றி!
[தொகு]சமுதாய வலைவாசலில் ‘Proposal to close all language Wikinews’ குறித்த இணைப்பினை இட்டு அறியத் தந்தமைக்கு நன்றி! என்னுடைய கருத்தினையும் அங்கு பதிவு செய்ய ஏதுவானது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 1 ஏப்ரல் 2013 (UTC)
விக்கிசெய்தியின் பக்க வடிவமைப்பில் மேலும் சில 'அழகுபடுத்தும்' வேலைகளைச் செய்ய எண்ணி, அட்டவணை ஒன்றினை சோதனை முயற்சியாக 'படிமமாக' ஏற்றினேன். நான் விரும்பும் இடத்தில் வைக்க எண்ணி பலமுறை முயன்றேன் ('முன்தோற்றம் காட்டு' உதவிகொண்டு); முடிவில் நேரமின்மையால்... நீங்கள் பார்த்து உரியன செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அப்படியே விட்டுவிட்டேன். உங்களின் திருத்தம், நன்று! ஆனால், நான் விரும்பியது - இவ்விதம். இவ்விதமிருந்தால், காண்பதற்கு நன்றாக இருக்கும். எப்படி செய்வது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 12 ஏப்ரல் 2013 (UTC)
- "இது எப்படி..." - அருமை! விரும்பியபடி செய்து காட்டியமைக்கு நன்றி! 'middle'க்கும் 'center'க்கும் இடையேயுள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது; கற்றுக்கொண்டேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 18 ஏப்ரல் 2013 (UTC)
மறுமொழி
[தொகு]எனது பேச்சுப்பக்கத்தில் மறுமொழி கொடுத்துள்ளேன். --Inbamkumar86 (பேச்சு) 10:55, 18 ஏப்ரல் 2013 (UTC)
- மிதவை வாழிகள் அமிலத்தன்மையை விரும்புகின்றன என்ற ஒரு புதிய செய்திக்கட்டுரையை எழுதியுள்ளேன். விக்கி பொதுவில் இருந்து படிமம் ஒன்றும் சேர்த்துள்ளேன். தங்களின் மேற்பார்வைக்காக. நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 12:03, 18 ஏப்ரல் 2013 (UTC)
- தானியங்கி கை மென்மையான தொடுதலை அடைந்துள்ளது என்ற செய்தியை எழுதியுள்ளேன். தங்களின் மேற்பார்வைக்கு வேண்டுகோள். --Inbamkumar86 (பேச்சு) 06:40, 19 ஏப்ரல் 2013 (UTC)
- தங்களின் மேற்பார்வைக்காக மேலும் ஒரு செய்திக்கட்டுரை நுகர் மின்னணுக்கருவிகளுக்கு நீர் ஆற்றலூட்டும் மின்கலம் --Inbamkumar86 (பேச்சு) 10:08, 19 ஏப்ரல் 2013 (UTC)
- மேலும் ஒரு செய்திக்கட்டுரை இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைத்த புதிய ஒலி செயலாக்கி --Inbamkumar86 (பேச்சு) 21:03, 19 ஏப்ரல் 2013 (UTC)
- மேலும் ஒரு செய்திக்கட்டுரை வெளவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச்செய்கிறது --Inbamkumar86 (பேச்சு) 10:15, 20 ஏப்ரல் 2013 (UTC)
The Wikinewsie Group
[தொகு]Hi. I apologize for not writing in Tamil. If you have not seen meta:The Wikinewsie Group, please consider taking a look and signing up as a supporter of the organization's creation. It might be very beneficial for any Indian based Wikinews contributors in any language. We are planning to have a meeting in the first week or two of May. If you sign up, please visit meta:The Wikinewsie Group/Meetings and indicate which time works best for you. --LauraHale (பேச்சு) 07:54, 20 ஏப்ரல் 2013 (UTC)
Social Bookmarks Template
[தொகு]கனகு ஐயா, Social Bookmarks Template இல் தங்களால் கூகிள் பிளஸ்ஸையும் (Google Plus) சேர்க்க இயலுமா? --Inbamkumar86 (பேச்சு) 13:46, 20 ஏப்ரல் 2013 (UTC)
- புதிய செய்திக்கட்டுரை : விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ --Inbamkumar86 (பேச்சு) 12:42, 21 ஏப்ரல் 2013 (UTC)
- பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது; தங்களின் மேற்பார்வைக்கு. --Inbamkumar86 (பேச்சு) 23:02, 21 ஏப்ரல் 2013 (UTC)
புது தில்லி...
[தொகு]வணக்கம்! அண்மையில் ஒரு செய்தித் தொகுப்பில் ‘புது தில்லி’ என்பதனை ‘புதுதில்லி’ என திருத்தியுள்ளீர்கள்; ‘புது தில்லி’ என்பது சரியானதே எனக் கருதுகிறேன். (தமிழ் மற்றும் ஆங்கில விக்கியில் பார்த்து உறுதிசெய்த பிறகே 'புது தில்லி' என்று எழுதினேன்)-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:23, 21 ஏப்ரல் 2013 (UTC)
- அவற்றைக் கவனிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான இரு சொற்பெயர்கள் ஒரு சொல்லால் தமிழில் வழங்கப்படுகின்றன. உ+ம்: நியூயார்க், நியூசிலாந்து போன்றவை. புதுதில்லியும் தமிழில் பரவலாக பயன்பாட்டில் உள்ள சொல்லே. மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 21:16, 21 ஏப்ரல் 2013 (UTC)
கருத்து
[தொகு]ஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்திகள் பறப்பதில் பாதிப்பு என்ற கட்டுரைத் தலைப்பில் 'பறப்பதில்' என்ற சொல்லை 'பறப்புச்சேவை' என மாற்றினால் பொருள் நன்கு விளங்கும் என்பது எனது கருத்து. --Inbamkumar86 (பேச்சு) 15:31, 22 ஏப்ரல் 2013 (UTC)
- கருத்துக்களை பரிசீலித்ததற்க்கும், கூகிள் + ஐ சேர்த்ததற்க்கும் மிக்க நன்றி. மேலும் ஒரு கட்டுரை இயாங்குசி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள்.--Inbamkumar86 (பேச்சு) 21:42, 22 ஏப்ரல் 2013 (UTC)
- ஒரு கட்டுரை மேற்பார்வைக்காக : அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி --Inbamkumar86 (பேச்சு) 09:19, 30 ஏப்ரல் 2013 (UTC)
வழு
[தொகு]என்னால் கட்டுரையை தொகுக்க முடியவில்லை பழுதுள்ள தலைப்பு என்று வழு வருகிறது. முன்னொரு முறையும் இந்த வழு வந்தது. கட்டுரை தலைப்புக்கு என விதி உள்ளதா? நான் இட்ட தலைப்பு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இலங்கையில் நடைபெறும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது கனடா என்பதாகும். --Kurumban (பேச்சு) 16:02, 28 ஏப்ரல் 2013 (UTC)
விக்கிசெய்தியின் பதிப்புரிமை பற்றி
[தொகு]விக்கி செய்திகளில் நான் எழுதிய செய்திகளை எனது இணையதளத்தில் வெளியிடலாமா? அப்படியே முழுதும். --Inbamkumar86 (பேச்சு) 10:51, 14 மே 2013 (UTC)
- விக்கிக்கு பின்னிணைப்பு கொடுக்கப்படும். --Inbamkumar86 (பேச்சு) 10:52, 14 மே 2013 (UTC)
- யாரும் வெளியிடலாம். மூலம் விக்கிசெய்தி எனக் குறிப்பிட்டாலே போதும். இணைப்புக் கூட அவசியமில்லை. பல இணையத்தளங்கள் விக்கிசெய்தியைத் தமது தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.--Kanags \பேச்சு 10:57, 14 மே 2013 (UTC)
- விக்கிக்கு பின்னிணைப்பு கொடுக்கப்படும். --Inbamkumar86 (பேச்சு) 10:52, 14 மே 2013 (UTC)
விக்கிசெய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல்...
[தொகு]வணக்கம்! தங்களின் ஆலோசனையின்படி ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆராய்ந்தேன். Wikinews Importer Bot எனும் Botஐ அங்கு United States வலைவாசலில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள். India வலைவாசலில் நான் பயன்படுத்திப் பார்த்தேன்; வேலை செய்கிறது. அதை தமிழிலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறேன். Bot குறித்து சரிவர தெரியாததால் கற்றுக்கொள்ளும் தருவாயில் இருக்கிறேன்! வெற்றி பெற்றதும் தெரிவிக்கிறேன். (நாளை முதல் மீண்டும் விக்கிசெய்திகளுக்கு எழுதுகிறேன்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:03, 19 மே 2013 (UTC)
- சென்னையில் நடந்த விக்கிப்பீடியர் சந்திப்பில் இது குறித்து சோடாபாட்டில் அவர்களிடம் உதவி நாடினேன். முயன்றுவிட்டு, அந்த bot உருவாக்கியவரிடமே தமிழுக்கும் பயன்படுமாறு நிரல் தருமாறு வேண்டுகோள் விடுக்கச் சொல்லிவிட்டார். ஆக இன்னமும்... முயல்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 30 மே 2013 (UTC)
- நன்றி.--Kanags \பேச்சு 12:22, 30 மே 2013 (UTC)
ஐயம்...
[தொகு]வணக்கம்!
2012 உலக சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்த் வெற்றி எனும் கட்டுரை, முதற்பக்கத்தில்-அண்மைய செய்திகளில்... மே 30, 2013 என்பதன்கீழ் பதிப்பாகியிருந்தது.
அக்கட்டுரையின் உள்ளே பார்த்தால் தேதி வார்ப்புருவில் date|30 may, 2012 என இருந்தது. அந்த வார்ப்புருவை date|may 30, 2012 என மாற்றினேன். சிக்கல் தீர்ந்தது. 30 may என வார்ப்புருவில் எழுதியிருந்தால் அனைத்து வருட மே 30 நாளன்று அக்கட்டுரை பதிப்பாகுமோ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 30 மே 2013 (UTC)
- உங்கள் சந்தேகம் சரியே. இப்படி ஒரு பிரச்சினை உள்ளது இப்போது தான் தெரியும். திருத்தியதற்கு நன்றி.--Kanags \பேச்சு 10:45, 30 மே 2013 (UTC)
வணக்கம்!
தங்களின் உரைநடையில் பொதுவாகவே 'அதிகாரபூர்வ' என்றே எழுதுகிறீர்கள். 'அதிகாரப்பூர்வ' என்பதுவே சரியானது என கருதுகிறேன். நான் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும், தெளிவு பெறவும் எண்ணியே இந்த ஐயத்தை முன்வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 24 ஜூலை 2013 (UTC)
- அதிகாரபூர்வம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. இதனால் இதில் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதிகாரபூர்வ என்று தானே பலரும் பயன்படுத்துகிறார்கள்?--Kanags \பேச்சு 21:19, 24 ஜூலை 2013 (UTC)
- அதிகாரம், அதிகாரி போன்ற சொற்களைப் போலவே அதிகாரப்பூர்வம் என்பதும் வடமொழியிலிருந்து வந்தது என்பதனை நினைவூட்டியதற்கு நன்றி!
- தமிழ்ச் சொல்லாக இல்லாததால் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை எனும் தங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன்.
- தமிழகத்தில் வெளிவரும் செய்தி இதழ்களில் ‘அதிகாரப்பூர்வ’ என்றே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ‘அதிகாரப்பூர்வ’ என்றே அழுத்தி உச்சரிக்கிறார்கள்.
தினமணியின் இணையத்தளத்தில் தேடியபோது...
- 892 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.
- 340 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.
பிபிசி தமிழோசையின் இணையத்தளத்தில் தேடியபோது...
- 16 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.
- 27 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்
இலங்கையின் உதயன் இணையத்தளத்தில் தேடியபோது... எல்லா இடங்களிலும் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்
- தகவல் பரிமாற்றத்திற்காக இத்தகவல்களை இங்கு தந்துள்ளேன்!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 25 ஜூலை 2013 (UTC)
முதற் பக்க இற்றை
[தொகு]வணக்கம்!
முதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத்தாழ 6 வார காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 31 ஜூலை 2013 (UTC)
- எனக்கு நேரமும் ஆர்வமும் இருந்ததனால்... நானே இற்றைப்படுத்தியுள்ளேன். ஒருமுறை சரிபார்த்து, தேவைப்படின் உரிய திருத்தங்களைச் செய்யவும். மேம்பாட்டிற்கான கருத்துகள் ஏதேனும் இருப்பின், தெரிவியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:02, 2 ஆகஸ்ட் 2013 (UTC)
வேண்டுகோள்...
[தொகு]வணக்கம்! நவநீதம் பிள்ளையின் யாழ்ப்பாணப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பினை இன்று தங்களால் எழுத இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:52, 28 ஆகஸ்ட் 2013 (UTC)
செவிமடுத்து செய்தமைக்கு மிக்க நன்றி! இலங்கை குறித்த செய்தி எதுவும் அண்மைக் காலத்தில் எழுதப்படாததாலும், இச்செய்தி முக்கியமானது என்பதாலும் தங்களுக்கு வேண்டுகோள் வைத்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:50, 29 ஆகஸ்ட் 2013 (UTC)
அண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து...
[தொகு]வணக்கம்! சென்ற ஆண்டின் செய்தி ஒன்று, இன்றும் முதற் பக்கத்தில் தோன்றிவிட்டது. அக்கட்டுரையில் 9 september என்பதனை september 9 என திருத்தியவுடன், முதற் பக்கம் சரியாகி விட்டது. ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக இதனை உங்களிடம் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 9 செப்டம்பர் 2013 (UTC)
செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை...
[தொகு]வணக்கம்! இக்கட்டுரையினை அக்டோபர் 27 அன்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அக்டோபர் 26 என கட்டுரையின் தொடக்கத்தில் இருந்தது. இதன் காரணமாக முதற் பக்கத்தில், அக்டோபர் 27 என்பதன்கீழ் இக்கட்டுரைத் தோன்றவில்லை. எனவே கட்டுரையின் தொடக்கத்தில் திருத்தியுள்ளேன். எனது திருத்தம் சரியானதா என்பதனைப் பார்க்கவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 28 அக்டோபர் 2013 (UTC)
- அக். 27 சரியானது. திருத்தியமைக்கு நன்றி.--Kanags \பேச்சு 07:15, 28 அக்டோபர் 2013 (UTC)
வேண்டுகோள்...
[தொகு]வணக்கம்! இங்கு எனது வேண்டுகோள் உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:35, 3 டிசம்பர் 2013 (UTC)
- டிசம்பர் இசை விழா 2013: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நீண்ட நாட்களுக்கு கொண்டாடவிருக்கிறது எனும் பக்கத்தையும் நீக்கி உதவுங்கள். ஏனெனில், கட்டுரைகளில் உள்ள வார்ப்புருவில் இந்தத் தலைப்பானது தெரிகிறது! அதே நேரத்தில், கருநாடக இசை எனும் வார்ப்புருவை மட்டும் பார்க்கையில் இந்தத் தலைப்பு தெரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 4 டிசம்பர் 2013 (UTC)
Original Report...
[தொகு]இதனை நேரில் சேகரிக்கப்பட்ட செய்தி என நாம் தமிழில் குறிப்பிடலாம். உங்களின் கருத்தினைப் பகிருங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 9 டிசம்பர் 2013 (UTC)
மனமார்ந்த நன்றி
[தொகு]எனக்கு ஆசிரியனாக , நண்பராக, வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நீங்கள் எனக்கு செய்த எல்லா சேவைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா . --Mohamed ijazz \பேச்சு 7 பெப்ரவரி 2014 (UTC).
திறனாய்வு செய்ய வேண்டுகோள்...
[தொகு]வணக்கம்! இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல் எனும் செய்திக் கட்டுரையினை படைத்துள்ளேன். நடுநிலையுடன், எவ்வித சிக்கல்களும் ஏற்படாதவாறு கவனமுடன் எழுதியுள்ளேன். ‘Original Reporting’ எனும் வகையில் இக்கட்டுரையினை படைத்துள்ளேன். அண்மைகால ஊடக செய்திகளை மூலமாக வைத்தும், எனது 23 ஆண்டுகால அவதானிப்பின் அடிப்படையிலும் இக்கட்டுரையினை உருவாக்கியுள்ளேன். இதைவிட விரிவாக எழுத இயலும்; இந்த அளவுக்கு மட்டுமே நேரமிருக்கிறது! நீங்கள் ஒருமுறை வாசித்து, விக்கிசெய்திக்கு பொருத்தமாயின் பதிப்பித்து விடுங்கள்; ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின் செய்துவிடுங்கள். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 23 மார்ச் 2014 (UTC)
- அங்கீகாரத்துக்கும், உதவிக்கும் நன்றி! வார இறுதியில் இன்னொரு கட்டுரையை படைக்க முயற்சி செய்கிறேன்.
- முதற்பக்கத்தில் செய்தியோடையை செயல்படுத்த இயலுமா? அதாவது, 5 முக்கிய செய்திகளை சுருக்கமாக ஓடவிடுதல். அதற்கு என்ன செய்யவேண்டும்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 25 மார்ச் 2014 (UTC)
- செய்தியோடவிடுதல் குறித்து முன்பு ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கிசெய்தியில் முன்னர் ஓட விட்டார்கள் இப்போது எடுத்து விட்டார்கள். இதனைப் பாருங்கள். ஆங்கில விக்கிசெய்தியும் தற்போது பெரிதாக செயல்படுவதில்லை. பலர் முரண்பட்டு வெளியேறி விட்டார்கள்.--Kanags \பேச்சு 09:28, 25 மார்ச் 2014 (UTC)
தேவையற்ற பக்கம்
[தொகு]- சென்னை சென்ரலில் குண்டு வெடித்தது எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தினை நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 2 மே 2014 (UTC)
- முல்லை பெரியாறு விவக்காரத்தில் 35 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்க்கு வெற்றி, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:26, 8 மே 2014 (UTC)
- 2014ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் பார்வையற்றவரின் மகள் சென்னையில் சாதனை, சென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வில் பார்வையற்றவரின் மகள் சாதனை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 10 மே 2014 (UTC)
- வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கோருவது மக்களின் உரிமை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தை நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 5 ஜூன் 2014 (UTC)
உதவி...
[தொகு]மிக அண்மையில் நான் எழுதிய கட்டுரைக்கு தங்களின் திறனாய்வு தேவைப்படுகிறது, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 27 மே 2014 (UTC)
- மன்னிக்கவும்; கால தாமதம் ஆகிவிட்டதால், நானே பதிப்பித்துவிட்டேன். திருத்தங்கள் தேவையெனில் செய்துவிடுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:54, 28 மே 2014 (UTC)
செய்தி எழுதும்போது நாடுகளின் வார்ப்புருவிற்க்காக வார்ப்புரு:- இந்த குறியீட்டுக்குள் இடப்படும் நாட்டின் தமிழ் பெயரை கொண்டுவர என்ன செய்ய வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:25, 13 ஜூன் 2014 (UTC)
ஆலோசனை தேவை...
[தொகு]வணக்கம். செய்திகளை விக்கி நடையில் எழுதுவது எப்படி? போன்ற எளிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான உதவிப் பக்கம் ஏதேனும் ஏற்கனவே உள்ளதா? இல்லையெனில் நான் உருவாக்கட்டுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 11 ஜூன் 2014 (UTC)
- செல்வசிவகுருநாதன், அப்படியான கட்டுரை தமிழில் இல்லை. விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கம் மொழிபெயர்க்க வேண்டி உள்ளது. இதனை ஆரம்பமாகக் கொள்ளலாம். எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:15, 11 ஜூன் 2014 (UTC)
வழிகாட்டலுக்கு நன்றி! சிறுகச் சிறுகச் செய்கிறேன்; முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 12 ஜூன் 2014 (UTC)
உதவி
[தொகு]- உங்களால் இயன்றால் Lead Articles 3, 4, 5 – இவைகளை இற்றை செய்யவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 14 ஜூன் 2014 (UTC)
- கட்டுரையில் இட வார்ப்புரு:ஆப்பிரிக்கா என்பதனை உருவாக்கி உதவுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 14 ஜூன் 2014 (UTC)
உதவி...
[தொகு]வணக்கம்! கீழ்க்காணும் தேவையற்ற தலைப்புகளை நீக்கி உதவுங்கள்:
- டிசம்பர் இசை விழா சென்னையில் இன்று தொடங்குகிறது
- டிசம்பர் இசை விழா 2014: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 4 டிசம்பர் 2014 (UTC)
- பகுப்பு:வடகிழக்கு பருவமழை எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 1 நவம்பர் 2015 (UTC)
- தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 1 நவம்பர் 2015 (UTC)
- விக்கிசெய்தி:Request an account - இதனை நீக்கி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:27, 5 நவம்பர் 2015 (UTC)
முதற் பக்க இற்றை...
[தொகு]Lead article 5 மிகவும் பழைய செய்தி என்பதால், அதனை இற்றை செய்தேன்; தொடர்பான பிற இற்றைகளையும் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:02, 6 நவம்பர் 2015 (UTC)
கருத்து தேவை...
[தொகு]முதற் பக்கத்தில் "செய்திச் சுருக்கம்" அல்லது "தலைப்புச் செய்திகள்" எனும் பகுதியை ஆரம்பிக்கலாமா? இந்தப் பகுதியை தினந்தோறும் ஒருமுறையாவது என்னால் இற்றை செய்ய இயலும். கட்டுரை எழுத எனக்கு நிறைய நேரம் தேவைப்படும்; ஆனால் செய்திச் சுருக்கங்களை தருவது எளிது.
- ஒரு ஐயம்: ஆங்கில விக்கிசெய்திகள் போன்றே இங்கும் பகுதிகள் இருக்க வேண்டும் எனும் புரிந்துணர்வு இருக்கிறதா அல்லது நாம் புதுமைகளை செயற்படுத்தலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 6 நவம்பர் 2015 (UTC)
- முதற்பக்கத்தில் மாற்றங்கள் வேண்டுமானால் செய்யலாம். முதலில் ஒரு "மாதிரி" முதல்பக்க வார்ப்புருவை வடிவமைத்துப் பார்க்கலாம். இப்போது வலப்பக்கத்தில் நிறைய இடம் மீதியாக உள்ளது. அதில் வேண்டுமானால் செய்திச் சுருக்கம் பகுதியை ஆரம்பிக்கலாம்.--Kanags \பேச்சு 11:45, 6 நவம்பர் 2015 (UTC)
முதற்பக்கத்தில் வார்ப்புரு:செய்திச் சுருக்கம் என்பதனை சரியாக பொருத்த, தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:46, 8 நவம்பர் 2015 (UTC)
- கவனிக்கிறேன்.--Kanags \பேச்சு 03:02, 8 நவம்பர் 2015 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், வார்ப்புரு:Mainpage v3 இதனைப் பாருங்கள். எனக்கு 100% திருப்தி இல்லை. இப்போதைக்குப் பரவாயில்லை போல் தெரிகிறது. ஆனாலும், இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது. அதனை நேர்ப்படுத்த வேண்டும்.--Kanags \பேச்சு 03:51, 8 நவம்பர் 2015 (UTC)
நீங்கள் செய்துள்ள மாற்றம் நன்றாக வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். //இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது// - உங்களின் இந்தக் கருத்து எனக்குப் புரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:23, 8 நவம்பர் 2015 (UTC)
நன்றிகள்...
[தொகு]அன்பு தோழமைக்கு அடியேன் வணக்கம், விக்கிசெய்திகள் பக்கத்திற்கு வழிகாட்டியமைக்கும், அறிமுகப்படுத்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு)23:16, 14 திசம்பர் 2015 (UTC)
உதவுங்கள்
[தொகு]தோழமைக்கு வணக்கம் எனது பயனர் பக்கத்தில் உள்ள, பயனர் தகவல் பெட்டகத்தை(வார்ப்புரு) சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு) 08:45, 15 திசம்பர் 2015 (UTC)
தங்களின் கருத்து தேவை...
[தொகு]வணக்கம்! தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது - கருத்துக் கணிப்பில் தகவல் எனும் கட்டுரையில், யூடியூப் நிகழ்படங்களின் இணைப்புகளையும் மூலத்தில் குறிப்பிட்டுள்ளேன். விக்கி நடைமுறைகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
காப்புரிமை சிக்கல் ஏதேனும் உள்ளதா? இந்த நிகழ்படங்களை கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனமே பதிவேற்றம் செய்துள்ளது. மாற்றுக் கருத்து இருப்பின், இந்த மூலங்களை உடனடியாக நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 22 பெப்ரவரி 2016 (UTC)
- செல்வா, குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வெளியீடு. இதனைத் தருவதில் தவறில்லை. வேறு யாரேனும் தரவேற்றியதை இணைப்பாகக் கொடுப்பது தவறு.--Kanags \பேச்சு 22:21, 26 பெப்ரவரி 2016 (UTC)
முதற்பக்கம்
[தொகு]பல மாதங்களாக முதற்பக்கம் இற்றை படுத்தப்படாமல் உள்ளது அதை கவனிக்கவும், படத்துடன் பல்வேறு செய்திகள் உள்ளன, அதை போடலாம் --Kurumban (பேச்சு) 00:01, 26 டிசம்பர் 2016 (UTC)
- வணக்கம் குறும்பன். ஓரிரு வாரங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இணைந்து, நான் இங்கு பங்களிக்கிறேன். வார இறுதி நாட்களில் என்னால் செய்திக் கட்டுரைகளை எழுத இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:21, 26 டிசம்பர் 2016 (UTC)
Your advanced permissions on ta.wikinews
[தொகு]Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.
நீங்கள் மேலே குறிப்பிட்ட விக்கியில் செயற்பாடற்றோர் தொகுதியில் உள்ளடங்குகிறீர். அந்த விக்கியிடம் தனக்குச் சொந்தமான உரிமை மீள்நோக்கு இல்லாததால், உலகளாவிய விக்கிக்கு இது பொருத்தமானது.
If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.
நீங்கள் உங்கள் உரிமைகளிலிருந்து விலக எண்ணினால், நீங்கள் இங்கு பதிலளிக்கலாம் அல்லது மெட்டாவிலிந்து உங்கள் உரிமைகளை மீளப்பெறுவதற்கான கோரிக்கை.
If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.
Yours faithfully. --Base (பேச்சு) 01:26, 10 மார்ச் 2019 (UTC)