உள்ளடக்கத்துக்குச் செல்

பழங்குடியினரை அங்கீகரிக்க ஆத்திரேலியாவில் பொது வாக்கெடுப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 8, 2010

ஆத்திரேலியப் பழங்குடியினரின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக அவர்களை சட்டரீதியாக அரசியலமைப்பில் அங்கீகரிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார்.


ஆத்திரேலியா நாளில் பழங்குடியினரின் ஆர்ப்பாட்டப் பேரணி

ஆத்திரேலியாவில் 550,000 பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது நாட்டின் மக்கள்தொகையில் 2.7% ஆகும். வேலையில்லாமை, சிறைக்கைதிகளாக, போதைப்பொருள் பழக்கம், மிதமிஞ்சிய மதுப்பழக்கம், நோய்கள் போன்றவை இவர்களிடையே ஏனைய மக்களுடன் ஒப்பிடிகையில் அதிகமாகக் காணப்படுகின்றன.


பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்த அனைத்து ஆத்திரேலியர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என கிலார்ட் தெரிவித்தார்.


"எமது முதலாவது ஆத்திரேலியர்களின் சிறப்பு இடத்தை ஆத்திரேலிய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை". இதனால் அரசியலமைப்பு மாற்றம் மிகவும் அவசியமானதாகும் என அவர் தெரிவித்தர். இவ்வாக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பிரதம அறிவிக்கவில்லை.


மூலம்

[தொகு]