பிரபல எழுத்தாளர் ஆர். சூடாமணி தனது 80 அகவையில் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டம்பர் 13, 2010


தமிழகத்தின் பிரபல பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணி இன்று தனது 80வது அகவையில் சென்னையில் காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார்.


1931 இல் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் சூடாமணி. இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார்.


பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளர்.

மூலம்[தொகு]