பிரான்சில் யூதப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், மார்ச் 19, 2012

பிரான்சிம் டூலோசு என்ர இடத்தில் உள்ள யூத இனப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருவர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிதாரி தப்பி ஓடிவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


சென்ற வாரம் வியாழன் அன்று இதே இடத்தில் பாதுகாப்புப் படையினர் இனந்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த பாதுகாப்புப் படையினர் அனைவரும் வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர்.


பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசி, தனது கல்வி அமைச்சருடன் சம்பவம் இடத்துக்கு விரைந்துள்ளார். இன்றைய சம்பவத்திற்கு இசுரேல் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.


இறந்தவர்களில் ஒருவர் பாடசாலை ஆசிரியையும் அவரது ஆறு வயது மகளும், மற்றவர் 17-வயது பள்ளி மாணவனும் ஆவார்.


மூலம்[தொகு]