உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சு அதிபர் தேர்தலில் சோசலிசக் கட்சித் தலைவர் பிரான்சுவா ஆலந்து வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 7, 2012

பிரான்சில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் சோசலிசக் கட்சித் தலைவர் பிரான்சுவா ஆலந்து வெற்றி பெற்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் பிரான்சுவா ஆலந்து 52% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவருடன் போட்டியிட்ட தற்போதைய அரசுத்தலைவர் நிக்கொலா சார்கோசி தோல்வியடைந்தார். 1981க்குப் பிறகு இரண்டவாது முறை போட்டியிட்டுத் தோற்கடிக்கப்பட்ட முதல் பிரான்சிய அரசுத்தலைவர் சார்கோசி ஆவார்.

பிரான்சுவா ஆலந்து

பிரான்சுவா ஆலந்து ஒரு சமூக ஆர்வலர் ஆவார். 1980களுக்குப் பிறகு பிரான்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முதல் சமூக ஆர்வலர் இவரே. பிரான்சுவா ஆலந்து மே 16 க்குள் அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரான்சுவா ஆலந்து மே 18ல் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார், அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பார் என எதிபார்க்கப்படுகிறது. சிக்காகோவில் நடைபெறவிருக்கும் நேட்டோ மாநாட்டிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலாவது கட்டத் தேர்தலில் ஆலந்து 28.6 வீத வாக்குகளையும், சார்க்கோசி 26.2 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். இத்தேர்தலில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் யூரோ நெருக்கடி ஆகியன செல்வாக்குச் செலுத்தியிருந்தன. எதிர்வரும் சூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.


மூலம்

[தொகு]