பிரேசிலில் விமானம் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், சூலை 13, 2011

பிரேசிலின் வடகிழக்கே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 16 பேரும் கொல்லப்பட்டனர்.


எல்410 என்ற இரட்டை-எஞ்சின் பொருத்தப்பட்ட இவ்விமானம் இன்று அதிகாலை 0615 மணிக்கு ரெசிஃப் நகரை விட்டுக் கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதாகியது. ரெசிஃபின் கடற்கரை ஒன்றில் தரையிறங்க முயற்சித்த போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. விமானம் உடனடியாகத் தீப்பற்றி எரிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


தீயணைப்புப் படையினர் உடனடியாகத் தலத்துக்கு விரைந்து தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்[தொகு]