பிரேசில் வெள்ளப்பெருக்கில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், சனவரி 13, 2011

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த பெரும் மழையினால் ரியோ டி ஜனெய்ரோ நகருக்கு அருகே உள்ள நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்தனர்.


டெரெசொபோலிசு என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 130 பேர் உயிருடன் புதையுண்டனர். இங்குள்ள ஆறு ஒன்று பெருக்கெடுத்ததில், பல கட்டடங்கள் நீருள் மூழ்கின. நோவா பிரைபேர்கோ நகரில் மண்சரிவில் 107 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செவ்வாய்க்கிழமை அன்று சாவோ பவுலோ மாநிலத்தில் பெய்த மழையினால் 13 பேர் கொல்லப்பட்டனர். பிரேசிலின் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் $461மில். பெறுமதியான நிவாரண உதவியை பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளார்.


மூலம்