உள்ளடக்கத்துக்குச் செல்

பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 14, 2017

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 தாண்டியுள்ளது.

பீகார் மாநில பேரிடர் மீட்பு குழு செயலாளர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில் பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் 65.37 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் 1.82 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 254 முகாம்களில் 48.120 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலம்[தொகு]

தினத் தந்தி ஆகஸ்ட் 14, 2017