புரோகிரஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைய எடுத்த இரண்டாவது முயற்சி வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 5, 2010


புரோகிரஸ் என்ற ரஷ்யாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த இணைப்பு முயற்சி தோல்வி கண்டிருந்தது.


2006 இல் ஏவப்பட்ட புரோகிரஸ் M-55 விண்கலம்

புரோகிரஸ் M-06M என்ற இந்த சரக்கு விண்கலம் விண்வெளி நிலைஅயத்தில் தங்கியிருக்கும் ஆறு பன்னாட்டு விண்வெளி வீரர்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் வேறு அவசியப் பொருட்களை ஏற்றிச் சென்றது.


சென்ற வெள்ளிக்கிழமை தொழில்நுட்பத் தவறு காரணமாக அது இணைய முடியாமல் போனது.


இரண்டாவது இணைதல் முயற்சி எவ்வித பிரச்சினையும் இல்லாது முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜூன் 30 ஆம் நாளன்று விண்ணுக்கு ஏவப்பட்ட புரோகிரஸ் 2.6 தொன் நிறையுள்ள பொருட்களை ஏற்றி சென்றுள்ளது. விண்வெளி நிலையத்தில் மூன்று அமெரிக்கர்களும், மூன்று இரசியர்களும் தங்கியுள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]