உள்ளடக்கத்துக்குச் செல்

புவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 20, 2012

நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் சிபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் புவியின் மூன்றில் இரண்டு பங்கு அளவுடைய புதிய புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியிலிருந்து சுமார் 33 ஒளியாண்டுகள் தூரத்திலுள்ள இக்கோள் யுசிஎப்-1.01 எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இக்கோளினது முழு மேற்பரப்பும் மக்மா தீக்குழம்பிலான செந்நிறச் சமுத்திரத்தினால் சூழப்பட்டிருப்பதாகவும், இது செவ்வாய்க் கிரகத்தை அளவில் ஒத்திருப்பதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது சூரியக் குடும்பத்திற்கு அண்மையில் உள்ள விண்மீன் திரள் ஒன்றிலேயே இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இத்திரளில் உள்ள ஜிஜே 436 எனும் விண்மீனினை வலம் வரும் மற்றொரு புறக்கோளாகிய அளவில் நெப்டியூனை ஒத்த ஜிஜே 436பி பற்றி ஆராய்ச்சி செய்யும் போதே இப்புதிய கோள் கண்டறியப்பட்டது. மத்திய புளோரிடா பல்கலைக்கழக குழுவே இவ்வாய்வை மேற்கொண்டது.


இக்கண்டுபிடிப்பு பற்றிய விபரங்கள் இவ்வார வானியற்பியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]