பூமியை ஒத்த கெப்லர்-22பி புறக்கோள் கண்டுபிடிப்பு
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
செவ்வாய், திசம்பர் 6, 2011
நமது சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றியுள்ள உயிரினம் "வாழக்கூடிய வலயம்" ஒன்றில் பூமியை ஒத்த புறக்கோள் ஒன்று இருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கெப்லர்-22பி என்ற இந்தப் புறக்கோள் ஏறத்தாழ 600 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இதன் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 22செ ஆகும். ஆனாலும், கெப்லர்-22பி கோளில் பாறைகளா அல்லது வளிமமா அல்லது திரவமா அதிகமாக உள்ளது என்பது போன்ற விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை.
கெப்லர் விண்கலம் மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் கெப்லர்-22பி உட்பட 54 புறக்கோள்கள் உயிரினம் வாழக்கூடியதாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் கெப்லர்-22பி மட்டுமே முதன் முதலாக வேறு தொலைநோக்கிகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள் ஆகும்.
கெப்லர் தொலைநோக்கித் திட்டத்தின் முதலாவது அறிவியல் மாநாட்டில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
மூலம்
[தொகு]- Kepler 22-b: Earth-like planet confirmed, பிபிசி, டிசம்பர் 5, 2011
- Planet found orbiting habitable zone of sun-like star, ராய்ட்டர்ஸ், டிசம்பர் 5, 2011