பேச்சு:கிக்சு போசானை ஒத்த அடிப்படைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செர்ன் அறிவிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

போசான் என்றும், கிக்சு போசானா இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கிக்சு போசான் மாதிரி துகிள் கண்டுபிடிப்பு என்று கட்டுரையை மாற்றலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran2 (பேச்சு) 17:26, 4 ஜூலை 2012 (UTC)

"கிக்சு போசானின் கடவுள் துகள்" என்று சொற்தொடர் பொருத்தமா என்று தெரியவில்லை. Higgs Boson's God Particle என்று பொருள் தருகிறது. --Natkeeran2 (பேச்சு) 23:45, 4 ஜூலை 2012 (UTC)

ஒலிக்கோப்பு[தொகு]

ஒலிவடிவில்

இயற்பியல் விளக்கம்[தொகு]

அடிப்படைத் துகிள்கள் இரு பெருவகைப் படும். ஒன்று ஃபெர்மியோன் (Fermion) எனப்படும் பொருள் துகள். மற்றையது போசோன் எனப்படும் விசை காவும் துகிள். ஃபெர்மியோன் துகிள்கள் குவார்க்சு லெப்ரான் என இரு வகைப்படும்.

அணு பற்றிய தற்போதைய செந்தர மாதிரியின் (Standard Model) படி அனைத்து திண்மங்களும் குவார்க்சு மற்றும் லெப்ரொன் ஆகிய ஃபெர்மியோன் துகள்களால் ஆனவை. குவார்க்சு கட்டுண்டு புரோட்டனையும் நியூற்ரோனையும் உருவாக்குகின்றன. புரோட்டனும் நியூற்றோனும் வலுவான விசையால் அணுவின் கருவை (nuclei) அமைக்கின்றன. லிப்ரன்கள் இரு வகையாக இயற்கையில் தோன்றுகின்றன. ஒன்று எதிர்ம மின்னூட்டம் பெற்ற எலொக்ரோன். மற்றையது மின்னூட்டம் இல்லாத நியூற்றியோனசு (neutrinos). நியுற்றியோனசு பொருட்களோடு பெரிதும் ஊடாடுவதில்லை. எலொக்ரோன்கள் நேர்ம மின்னோட்டம் பெற்ற அணுக்கருவோடு கவரப்பட்டு அணுவாக உருவாகின்றது.

எவ்வாறு ஃபெர்மியோன்கள் சேர்ந்து பொருளாக உருவாகின்றன என்பது அடிப்படை விசைகளில் தங்கி உள்ளது. அண்டத்தில் நான்கு வகையான அடிப்படை விசைகள் உள்ளன. அவை: மின்காந்த விசை, புவியீர்ப்பு விசை, வலுவற்ற விசை, வலுவான விசை. துகிள்களுக்கு இடையேயான விசை போசோன் வகை துகிள்களை பரிமாறுவதன் மூலம் உருவாகிறது.

தற்போதைய அணு, அணுத் துகள்கள் பற்றிய கோட்பாட்டு மாதிரியில் (Standard Model) அனைத்து விசை காவும் துகிள்களுக்கு திணிவு இருக்கக் கூடாது. ஆனால் வலுகுறை விசையைக் காவும் துகிள்களுக்கு திணிவு உண்டு.